Radhika Apte: பெண் குழந்தையை பெற்றெடுத்த ரஜினி பட நடிகை... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.!
தமிழில் ரஜினிகாந்துடன் நடித்து மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்ற நடிகை ராதிகா ஆப்தே, திருமண வாழ்க்கைக்கு பின்னர் பெண் குழந்தைக்கு தாயானார்.
டிசம்பர் 14, மும்பை (Cinema News): இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ராதிகா ஆப்தே (Radhika Apte), ஹிந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான தோனி திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிசெல்வன், கபாலி, சித்திரம் பேசுதடி இரண்டாம் பாகம், மேரி கிறிஸ்மஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். TIME 2024 Person: 2024-ம் ஆண்டின் சிறந்த மனிதர் யார்? டைம் இதழ் ஆய்வு தகவல்.!
காதலருடன் திருமணம்:
மேலும், இவர் வெட்டிங் டே, கால் டு ஸ்பை ஆகிய ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார். சர்வதேச அளவில் மிகவும் பரிட்சயமான இந்திய நடிகையாக இருந்து வரும் ராதிகா அடல்ட் காட்சிகளிலும் தயங்காமல் நடித்து சர்வதேச அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறார். சமீபத்தில் தனது காதலர் பெனடிக் டைலர் (Benedict Taylor) என்பவருடன் திருமணம் செய்து, தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
பெண் குழந்தை:
இதனிடையே, லண்டன் திரைப்பட விழாவில் நேரில் வந்து தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த அவருக்கு, சமீபத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததிலிருந்து அதன் பாலினத்தை அவர் அடையாளப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில், இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் நடிகை ராதிகா ஆப்தேவின் தோழியான சாரா ஆப்சன்ஸ், "எனது சிறந்த பெண்கள்" என்று பதிவிட்டுள்ளார். இதனால் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், ராதிகா ஆப்தே தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
குழந்தையுடன் வேலையை தொடங்கிய நடிகை ராதிகா ஆப்தே: