Stunt Master Kothandaraman Passed Away: ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்.!
பிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல் நலக்குறைவால் காலமானார்.
டிசம்பர் 19, கோடம்பாக்கம் (Cinema News): தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவர் கோதண்டராமன் (Kothandaraman). அவருக்கு வயது 65. தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகாலம் அவர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ‘எல்லாமே என் பொண்டாட்டி தான்’, முரளி, சிவாஜி நடித்த ‘எல்லாமே என் ராசாதான்’, ‘ஒன்ஸ் மோர்’ உள்ளிட்ட பல படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். Vijay Attend Keerthy Suresh Marriage: கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு மாப்பிள்ளை மாதிரி என்ட்ரி கொடுத்த விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்.!
ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் மறைவு:
கடந்த, 2012 ல் சுந்தர் சி இன் கலகலப்பு திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி நல்ல வரவேற்பையும் பெற்றார். இந்த நிலையில் அவர் நேற்று(18.12.2024) இரவு சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். கோதண்டராமனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது. கோதண்டராமன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.