டிசம்பர் 19, கோவா (Cinema News): தமிழ், தெலுங்கு உட்பட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), தெறி திரைப்படத்தின் ரீமேக்கான ‘பேபி ஜான்’ படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாக இருந்தார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து அவர்களது திருமணம், இந்து முறைப்படி டிசம்பர் 12 அன்று நடைபெற்று முடிந்தது.
கீர்த்தி சுரேஷ் திருமணம்:
கோவாவில் (Goa) நடைபெற்ற இவர்களின் திருமண வைபோகத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். கீர்த்தி சுரேஷின் திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது. பிராமணர்கள் சடங்குகளின்படி, அவரது தந்தை சுரேஷ் குமார் மடியில் கீர்த்தி அமர்ந்திருக்க, மணமகன் ஆண்டனி தட்டில் அவருக்கு தாலி கட்டியுள்ளார். மணமக்கள் கழுத்து நிறைய மாலைகள் அணிய, கீர்த்தி சுரேஷ் சிவப்பு நிற சேலை, பாரம்பரிய ஆபரணங்கள் அணிந்து திருமண கோலத்தில் இருந்தார். Bigg Boss Tamil Season 8: "பவித்ரா கடிக்கிறா" - கூப்பாடு போடும் மஞ்சரி., கலவரமாகும் பிக் பாஸ் தமிழ்.. ப்ரோமோ உள்ளே.!
இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கும் விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். பட்டு வேட்டி சட்டையுடன் மாப்பிள்ளை போன்று விஜய் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "எங்கள் கனவு திருமணத்தில் எங்களின் கனவு நபர் ஆசீர்வதித்தபோது! அன்புடன் உங்கள் நண்பி, நண்பன்" என்று பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்:
When our dream icon blessed us at our dream weddinggg! @actorvijay sir 🤗❤️
With love,
Your Nanbi and Nanban#ForTheLoveOfNyke pic.twitter.com/Fpwk2sBVxS
— Keerthy Suresh (@KeerthyOfficial) December 18, 2024