December Month Birth CineStars: டிசம்பர் மாதத்தில் பிறந்து இந்திய அளவில் சாதனை புரிந்த திரைத்துறை நட்சத்திரங்கள் யார் யார்?..!
இம்மாதம் செப்டம்பர் மாதம் தொடங்கும் அதே வாரம் கிழமையில் தொடங்கி, ஏப்ரல் மாதத்தை போல இறுதியில் நிறைவுபெறும்
டிசம்பர், 8: ஆண்டில் இறுதி மாதமாகவும், 31 நாட்களை கொண்ட கடைசி மாதமாகவும் இருப்பது டிசம்பர் (December). இம்மாதம் செப்டம்பர் மாதம் தொடங்கும் அதே வாரம் கிழமையில் தொடங்கி, ஏப்ரல் மாதத்தை போல இறுதியில் நிறைவுபெறும். இலத்தின் மொழியில் Decem என்பது 10 என்ற இலக்கத்தினை குறிப்பது ஆகும்.
உலகளவில் டிசம்பர் மாதத்தில் அதிக நேரம் சூரிய ஒளி மக்களுக்கு கிடைக்கிறது. இந்த மாதத்தில் பிறந்து இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக சாதித்து வரும் நபர்களின் பட்டியல் குறித்த விபரங்களை இன்று தெரிந்துகொள்ளலாம்.
சல்மான்கான் (Salman Khan): பாலிவுட் திரையுலகில் முக்கியமான நாயகன் சல்மான் கான். இவர் கடந்த 1965ம் ஆண்டு டிசம்பர் 27ல் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் பிறந்தார். எழுத்தாளர் சலீம் கானின் மூத்த மகனான சல்மான் கானின் தாய் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். இதனால் சல்மான் கான் 2 மத முறைப்படியும் வளர்க்கப்பட்டார். கடந்த 1988ல் Biwi Ho To Aisi என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான சல்மான் கான் இன்றளவில் தவிர்க்க இயலாத நாயகனாக உயர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த் (Rajinikanth): தென்னிந்திய சினிமாவிலும், ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் 40 ஆண்டுகளை கடந்து உச்ச நட்சத்திரமாக கோலோச்சி இருப்பவர் சிவாஜி ராவ் கைக்வாட் என்ற ரஜினிகாந்த். இவர் கடந்த 12 டிசம்பர் 1950ல் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.
கூலி வேலை செய்து, பேருந்து நடத்துனராக பணியாற்றி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் கலை வாழ்க்கையை கௌரவித்து பத்மபூஷன், பத்ம விபூஷண் உட்பட பல விருதுகள் அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. தடம்மாறி செல்லும் வாழ்க்கையில் ஆன்மீக பற்று புரிதலுடன் இருந்தால் என்றுமே யாருக்குமே வெற்றிதான் என்பதை இன்றளவும் நிரூபிக்கும் சக்தியாக இருப்பவர் ரஜினிகாந்த். EPF: வருங்கால வைப்பு நிதி என்றால் என்ன?.. நமது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவது ஏன்?..!
டகுபதி வெங்கடேஷ் @ வெங்கி (Daggubati Venkatesh): தெலுங்கு திரையுலகில் 35 ஆண்டுகளாக கோலோச்சி இருப்பவர் வெங்கி என்ற வெங்கடேஷ். இவர் டிசம்பர் 13, 1960ல் சென்னையில் பிறந்தவர் ஆவார். பின்னாளில் கலியுக பாண்டவலு என்ற திரைப்படம் மூலமாக தெலுங்கு திரையுலகுக்கு பரிட்சயமான வெங்கி, 35 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களுக்காக படங்களில் நடித்து அவர்களை மகிழ்வித்து வருகிறார். இவரது தங்கை லட்சுமியைத்தான் நடிகர் நாகார்ஜூனா திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியின் மகன்தான் நாக சைதன்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமன்னா (Tamannaah): தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் தமன்னா. இவர் கடந்த 21 டிசம்பர் 1989ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பிறந்தார். இவரின் தந்தை சந்தோஷ் வைர நகை வியாபாரி ஆவார். தனது 13 வயதில் திரைத்துறை மீது ஏற்பட்ட மோகத்தால் நடிக்க வந்த தமன்னாவுக்கு இன்றளவில் பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
சமீரா ரெட்டி (Sameera Reddy): மிகக்குறைந்த படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற நடிகைகளில் முக்கியமானவர் சமீரா ரெட்டி. இவர் 14 டிசம்பர் 1980ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பிறந்தார். தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி போன்ற சொற்ப அளவிலான படங்களில் நடித்திருந்தாலும், அவரின் நடிப்பு & படத்தேர்வு காரணமாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவர் ஹிந்தி படங்களில் அதிகளவு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.