Singer Kalpana Suicide Attempt: பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. ரசிகர்கள் ஷாக்..!
பின்னணி பாடகி கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 05, ஐதராபாத் (Cinema News): தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடிய பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் (வயது 44), தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Murmur Preview Show: பிரிவியூ ஷோவில் பார்வையாளர்களை பதறவைத்த மர்மர் திரைப்படம்; வெளியீடு தேதி, ட்ரைலர் இதோ.!
பாடகி கல்பனா தற்கொலை முயற்சி:
கல்பனா (Kalpana Raghavendar), பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். பிரபல பின்னணிப் பாடகர் டி.எஸ். ராகவேந்திராவின் மகள் கல்பனா, ஐந்து வயதில் தனது பயணத்தைத் தொடங்கினார். பல மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 2010யில் ஸ்டார் சிங்கர் மலையாளத்தை வென்ற பிறகு, அவர் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றார். மேலும் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அவர், பல்வேறு இசை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பிக் பாஸ் தெலுங்கு சீசன் 1 இல் பங்கேற்றுள்ளார்.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)