
மார்ச் 04, கோடம்பாக்கம் (Cinema News): தமிழ் திரையுலகில் கேமிரா ஆக்சன் (Camera Action Horror Movies) முறையில் தயாராகியுள்ள ஹரர்-திரில்லர் பேய் திரைப்படம் மர்மர் (Murmur). சர்வதேச மொழிகளில் பல திரைப்படங்கள் கேமிரா ஆக்சன் பேய் படங்கள் வெளியானாலும், தமிழுக்கு இதுவே முதல் முறை ஆகும். என்பது கவனிக்கத்தக்கது. கேமிராவுடன் அமானுஷ்யம் நிறைந்த இடத்திற்கு செல்லும் நபர்களுக்கு நேர்ந்தது என்ன? என்பதை அதன் கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு தெரிந்துகொள்வது இவ்வகை படங்களின் தனித்துவம் ஆகும். நாம் சாதாரண படங்களை பார்ப்பதை காட்டிலும், கேமிரா ஆக்சன் படங்கள் கூடுதல் பீதியை ஏற்படுத்தும். Gangers: சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் திரைப்படம்.. வெளியீடு தேதி அறிவிப்பு.. சிரித்து மகிழ தயாரா ரசிகர்களே?
பிரிவியூ காட்சிகளை பார்த்தவர்கள் ஷாக்:
இந்நிலையில், ஹேம்நாத் நாராயணன் (Hemnath Narayanan) இயக்கத்தில், எஸ்பிகே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடட், ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் (Spk pictures private limited in association with Stand Alone pictures international), ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரோஹித் எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம் மர்மர் (Murmur Tamil Movie). குழந்தைகளை கொடூரமாக கொலை செய்யும் சூனியக்காரி வாழும் காட்டுக்குள், ஊரார் கதையைக் கேட்டு, அது பொய்யாக இருக்கலாம் என நிரூபிக்க புறப்படும் நபர்களுக்கு நேர்வது என்ன? என்பது தொடர்பான கதையை மைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாக மர்மர் உருவாகி இருக்கிறது. படம் வரும் 07 மார்ச் 2025 அன்று திரைக்கு வரும் நிலையில், சமீபத்தில் மர்மர் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியானது.
இந்நிலையில், படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில், அதனை பார்க்க வந்த பார்வையாளர்கள் பலரும் பதற்றமுறும் அளவு படத்தின் தரம் இருந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரிவியூ காட்சிகள்:
Preview Show's Another exciting glimpse into #MURMUR 🔥 💀 !All set for March 7th release in cinemas near you.pic.twitter.com/5RlELk9tyy
Dare to say it out loud: #Kabhokabhakabisthu!@spkpicture @standalonepicin @Hemnathnarayana @DOP_Jason_Will #EditorRohith @hasinipavithra1…
— Ramesh Bala (@rameshlaus) March 4, 2025
மர்மர் படத்தின் ட்ரைலர்: