Murmur Trailer Tamil: காட்டுக்குள் கேமிரா., வேட்டையாடும் சூனியக்காரி.. தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம்.. மர்மர் படத்தின் பதறவைக்கும் ட்ரைலர் இதோ.!
திகில் படங்கள் என்றாலே புதிய அனுபவத்தை உண்டாக்கும். சர்வதேச அளவில் பல பேய் படங்கள் வந்தாலும், கேமிரா திரில் படங்களின் அனுபவமே தனித்தரமாக இருக்கும்.
பிப்ரவரி 24, கோடம்பாக்கம் (Cinema News): தமிழ் திரையுலகில் மோகினியில் தொடங்கி முனி, அரண்மனை, 13ம் நம்பர் வீடு, டிமாண்டி காலனி, பீட்சா, மாயா, காஞ்சனா, அவள் உட்பட பல திரைப்படங்கள் திகிலூட்டும் அனுபவத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பேய் கதை (Tamil Horror Movies) கொண்ட திரைப்படங்கள் ஆகும். ஒவ்வொரு படமும் அதன் தனித்தன்மை, மக்களின் வரவேற்புக்கு ஏற்ப மிகப்பெரிய வெற்றியும் அடைந்துள்ளது. முதலில் திகிலை மட்டும் அடையாளப்படுத்தி கொண்டு வரப்பட்ட பேய் படங்கள் தில்லுக்கு துட்டு திரைப்படத்திற்கு பின்னர் காமெடி கலந்தும் இயக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. Mirchi Senthil: வாட்சப் மெசேஜை நம்பி ரூ.15 ஆயிரம் பணத்தை இழந்த சீரியல் நடிகர்.. வருத்தத்துடன் வேண்டுகோள்.!
பீதியை ஏற்படுத்தும் அனுபவம் கொண்ட பெண்கள்:
இதனிடையே, தமிழ் திரையுலகில் முதல் முறையாக, கேமிரா ஆக்சன் (Camera Action Horror Movies) முறையில் பேய் படம் ஒன்று திரைக்கு வருகிறது. இதுபோன்ற படங்கள் சர்வதேச மொழிகளில் பல வெளியாகி இருந்தாலும், தமிழுக்கு முதல் முறை என்பது கவனிக்கத்தக்கது. கேமிராவுடன் அமானுஷ்யம் நிறைந்த இடத்திற்கு செல்லும் நபர்களுக்கு நேர்ந்தது என்ன? என்பதை அதன் கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு தெரிந்துகொள்வது இவ்வகை படங்களின் தனித்துவம். நாம் சாதாரண படங்களை பார்ப்பதை காட்டிலும், கேமிரா ஆக்சன் படங்கள் கூடுதல் பீதியை ஏற்படுத்தும்.
ஊர்மக்களின் பேச்சை மீறி அமானுஷ்ய காட்டுக்குள் பயணம்:
அந்த வகையில், ஹேம்நாத் நாராயணன் (Hemnath Narayanan) இயக்கத்தில், எஸ்பிகே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடட், ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் (Spk pictures private limited in association with Stand Alone pictures international), ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரோஹித் எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம் மர்மர் (Murmur Tamil Movie). குழந்தைகளை உடல்-தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யும் சூனியக்காரி வாழும் காட்டுக்குள், ஊரார் சொல்லும் கதையைக் கேட்டு, அது பொய்யாக இருக்கலாம் என நிரூபிக்க புறப்படும் நபர்களுக்கு நேர்வது என்ன? காட்டுக்குள் நடந்தது என்ன? என்பதை அவர்களின் கேமிராவில் பதிவான காட்சிகள் கொண்டு திரில் அனுபவத்தை தரும் வகையில் படம் உருவாகி இருக்கிறது. படம் வரும் 07 மார்ச் 2025 அன்று திரைக்கு வரும் நிலையில், மர்மர் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளது.
மர்மர் தமிழ் ட்ரைலர் இதோ (Murmur Tamil Trailer):
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)