TFPC Lays Restrictions On Dhanush: நடிகர் தனுஷை வைத்து படமெடுக்க புது நிபந்தனை; தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை..!

தனுஷை வைத்து படம் எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என புது உத்தரவை தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.

Actor Dhanush (Photo Credit: @Vignesh58Viki X)

ஜூலை 30, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவருடைய 50-வது திரைப்படம் ராயன் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தனுஷை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் சங்க (Tamil Film Producers Council) கூட்டத்தில் பல நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்று முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டுக் கூட்டத்தில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் கொண்டுவரப்பட்டது. 'Vaazhai' 2nd Single Release: 'ஒரு ஊருல ராஜா' பாடல்.. வாழை படத்தின் 2-வது பாடல் வெளியீடு..!

இதில் ஒரு சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே முன்பணத்தை பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணிபுரியாமல், புதிதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால், ஏற்கனவே முன்பணம் (Advance Payment)கொடுத்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு பணத்தை இழந்துள்ளனர். இதன்காரணமாக, இனிவரும் நாட்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் ஒரு தயாரிப்பாளரிடம் முன்பணம் பெற்றிருந்தால், அந்த திரைப்படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ், பல திரைப்படத்தில் பணிபுரிந்து கொண்டு, பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதால், இனி அவரை வைத்து படம் எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனுஷ், ராயன் படத்திற்கு முன்பே பல படத்திற்கு தயாரிப்பாளரிடம் முன் பணத்தை பெற்றுக்கொண்டு, அதில் நடிக்காமல் ராயன் பட ரிலீஸை தொடர்ந்து எழுந்த புகாரை அடுத்து, தயாரிப்பாளர் சங்கம் இந்த அதிரடி முடிவை அறிவித்துள்ளது. இது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.