Bigg Boss Tamil Season 8: "ஆறு பேரில் இரண்டு பேர் வெளியே வந்தால் இந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும்" உண்மையை உடைத்த தர்ஷா குப்தா.!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார்.

Dharsha Gupta (Photo Credit: @VijayTelevision X)

அக்டோபர் 28, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர்.

முக்கியப்புள்ளிகள் வெளியேற்றப்பட்டனர்:

முதல் நாளே எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட சாச்சனா, மீண்டும் 4வது நாளிலேயே உள்ளே வந்தார். முதல் வார எவிக்ஷனில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நேற்று தர்ஷா குப்தா வெளியேறினார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விஜய் சேதுபதி உடன் பேசிய பிறகு, வீட்டில் உள்ள சக போட்டியாளர்களிடம் பேசினார். Vijay Sethupathi Angry: போட்டியாளர்களை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி; சவுண்டுக்கு சவுண்டாக வைத்த ஆப்பு.!

வன்மத்தை கக்கிய தர்ஷா:

அப்போது அவர் ‘சுனிதா, மேனேஜரும் நீங்க தான், கஸ்டமரும் நீங்க தான். நீங்களே ஒன்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்ல வருவதற்கு முன்னாடியே, உன் கவலை இதுதானா என்று சொல்லியே என்னை அனுப்பிட்டீங்க. வெளியில வந்து நிறுத்தலையா?" என்று கூறினார். இதற்கு சுனிதா, "ஐயோ கடவுளே!" என்று பதிலளிக்கிறார்.

அதன் பின், "உங்களுக்கெல்லாம் நான் வெளியேறியது மகிழ்ச்சியாக இருக்கும்; குறிப்பாக ஆறு பேர் கொண்ட குழுவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நாமினேஷன் ப்ரீ பாஸ் கேட்டு கெஞ்சினேன், கதறினேன், ஆனாலும், ஒரு துளி இரக்கமில்லாமல் நீங்களே வச்சுக்கிட்டீங்க; அடுத்த வாரம் வரிசையாக வருவீங்க! அந்த ஆறு பேருல சுனிதாவும் ஜாக்குலினும் போய்விட்டா நல்லாயிருக்கும். தர்ஷிகா கேப்டனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி தான் கெத்தா இருக்காங்க. வரும்போதே ரெண்டு அப்ரசிண்டிஸ்களை கூட்டிட்டு வந்துருக்காங்க, துணி துவைச்சு போட" என்று வச்சு செய்தார்.

சுனிதாவை அவமானப்படுத்திய தர்ஷா:

 

View this post on Instagram

 

A post shared by Biggboss Sodhanaigal (@biggboss_sodhanaigal_live)