Bigg Boss Tamil Season 8: "இது ஒன்னும் உங்க அப்பா வீடு கிடையாது" குழாய் அடி சண்டைப் போடும் தர்ஷிகா, சௌதர்யா..!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
டிசம்பர் 04, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். TV Actor Yuvanraj Nethrun Dies: பிரபல பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் தர்ஷிகா மற்றும் ஜாக்குலின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஜாக்லின் சீ போ என்று சொல்ல, அதற்கு தர்ஷிகா என்னை பார்த்து அப்படி சொல்லாத.. உன் இஷ்டத்துக்கு பேசுறதுக்கு இது ஒன்னும் உங்க அப்பா வீடு கிடையாது என்று சொல்கிறார். ஜாக்குலினுக்கு ஒன்னு என்றால் ஓடிவரும் சௌந்தர்யா யாரை கேட்டு அப்பா வீடுனு சொல்லுற? என்று சௌந்தர்யாவிடம் வாக்குவாதம் செய்கிறார். நீ எப்படி அவங்க அப்பாவை பத்தி பேசலாம் என்று சௌந்தர்யா கேட்க, அதற்கு அசராத தர்ஷிகா நான் அப்படித்தான் பேசுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் சண்டை வந்து சௌந்தர்யா தர்ஷிகாவை அடிக்க போகிறார்.
இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ: