டிசம்பர் 04, சென்னை (Cinema News): வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி, பல திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் தான் யுவன்ராஜ் நேத்ரன் (Yuvanraj Nethrun). அவரது மனைவி தீபா முருகனும் பிரபல சீரியல் நடிகை தான். இவர்களுக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக பயணித்து வருகிறார். ஜோடி நம்பர் 1 சீசன் 3 மற்றும் 5லும் பங்கேற்று இருக்கிறார். பிரபல பாக்கியலட்சுமி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நேத்ரன். Pushpa 2: "புஷ்பான்னா ஃபயர் டா" டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் 'புஷ்பா 2' படம்..!
சமீபத்தில் விஜய் டிவியில் வெளியாகி வரும் பொன்னி சீரியலில் கடைசியாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென அவரது கதாப்பாத்திரம் வீட்டை விட்டு வெளியேறுவதாக காட்டினர். ஆரம்ப கட்டங்களில் நல்ல உடல்வாகுடன் இருந்த நேத்ரன் சமீப காலங்களில் மிகவும் ஒல்லியாக மாறிப்போனார். ஆறு மாதங்களுக்கு முன் நேத்ரனின் இரண்டாவது மகள் அபிநயா, நேத்ரனுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு பின்னர், வீட்டில் ஓய்வில் இருந்த நேத்ரன் இன்று மாலை உயிரிழந்துள்ளார். இந்த தகவல் சின்ன சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேத்ரன் மறைவை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.