Bigg Boss Tamil Season 8: சக போட்டியாளர்களை வெளுத்து வாங்கிய ஜெப்ரி: காரணம் என்ன? பரபரப்பு ப்ரமோ.!

பிக்பாஸ் வீட்டில் கானா பாடகர் ஜெஃப்ரி, தன்னுடைய விளையாட்டை துவங்கியிருக்கிறார்.

Jeffrey (Photo Credit: YouTube)

அக்டோபர் 17, சென்னை (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். முதல் நாளே 24 மணிநேர எலிமினேஷன் பிரிவில் சாச்சனா வெளியேற்றப்பட்டார். மீண்டும் 4வது நாளிலேயே உள்ளேயும் வந்தார். இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் எவிக்ஷனில் வாக்குகளின் அடிப்படையில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். ரவீந்தர் வெளியேற்றம் பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்: தொடர்ந்து இந்த வாரத்தின் தலைவராக சத்தியா நியமிக்கப்பட்டு இருக்கிறார். நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து பிக் பாஸ் வீடு சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. முத்துக்குமரன் சாக்சனா ,தர்ஷா குப்தா, சௌந்தர்யா என 10 பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனிடையே பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் போன்றில் போட்டியாளர்கள் தங்களை முதலிடத்தில் வைத்துக்கொள்ள சக போட்டியாளர்களிடம் வாக்கு கேட்கிறார்கள். இதில் முத்து, விஷால் ஆனந்தி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். Actress Radhika Apte: நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பம்.. ரசிகர்கள் ஷாக்..!

ஜெஃப்ரி கோபம்: 13வது இடத்திற்கு வந்த சுனிதாவிற்கு யாரும் ஓட்டு போடாததால், தனது மொழி பிரச்சனை தான் காரணம் என அழத் தொடங்கினார். பின்னர் ஜெஃப்ரி ஓட்டு கேட்கும் போது, பெண்கள் அணியினர் நமட்டு சிரிப்பு சிரித்ததால் கோபமடைந்தார். இதற்கு ஜெஃப்ரி, "இங்க இருக்கும் எல்லோரையுமே எல்லோருக்கும் தெரியும். என்னை யாருக்குமே தெரியாது. நான் புதுசு. உங்களை மாதிரி எல்லோருக்கும் என்னையும் தெரிந்திருந்தால் இந்த ஓட்டு பிரிந்திருக்கும். பவித்ராவுக்கு யாருமே தூக்கல நான் கையை தூக்கி சிரிச்சேனா. உங்களை ஓட்டு போடுங்கள் என்று நான் கேட்கவில்லை, சிரிக்காதீர்கள். பிக் பாஸ் சொன்னதால்தான் நான் கட்டுப்பட்டு இருக்கிறேன். ஓட்டு போட்டா உள்ளே, இல்லனா வெளியே என்றெல்லாம் போட்டா" என்றார்.

ஜெஃப்ரி கொடுத்த பதிலால் சிரித்தவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்டு வாயை மூடிக் கொண்டனர். ஜெஃப்ரி கேட்டது நியாயமானது தான் மக்களிடையே பிரபலம் அடைய வேண்டும் என்று தான் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். மேலும் அவர் நன்றாக விளையாடியும் வருகிறார். இப்படி போனால் அவரது கேம் சிறப்பாக நாளுக்கு மாறும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

கேலி செய்த போட்டியாளர்களிடம் கேள்வி கேட்ட ஜெஃப்ரி:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement