Actress Chitra's Father Suicide: சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.. காரணம் என்ன தெரியுமா?!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Chitra's Father Suicide (Photo Credit: @CinemaWithAB X)

டிசம்பர் 31, சென்னை (Chennai News): சென்னையை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா (VJ Chitra). இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் (Pandian Stores) நெடுந்தொடரில் நடித்து பெரிதளவு தமிழக மக்களால் கவனிக்கப்பட்டார். மேலும் பல திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு இவருக்கு, ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சியிக்கப்பட்டு இருந்தது.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை:

இதனிடையே, அவர் நசரத்பேட்டை பகுதியில் உள்ள விடுதியில், 09 டிசம்பர் 2020 அன்று மர்மமான வகையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்ததாக ஹேம்நாத் (Hemnath) கூறினார். ஆனால், சித்ராவின் பெற்றோர் ஹேம்நாத் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து இருந்தனர். சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவு அன்று பெரும் துயரத்தை சின்னத்திரையுலகினரிடையே ஏற்படுத்தியது. மேலும், சித்ராவின் எதிர்கால கணவர் ஹேம்நாத் நடிகையை கொலை செய்து நாடகம் ஆடி வருவதாக சித்ராவின் பெற்றோர் தரப்பில் காவல் நிலாயத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பான விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் நடிகை சித்ரா வழக்கில், அவரின் கணவரான ஹேமந்த் விடுவிக்கப்பட்டார். Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்கள் யார்? விபரம் உள்ளே..!

நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை:

இதை எதிர்த்து சித்ராவின் தந்தை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் காமராஜ். இவர் தனது மகள் இறப்பால் மனதளவிலும் உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தன் மகள் சித்ராவின் துப்பட்டாவிலேயே அவர் தூக்கு போட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். காவல்துறையினர் சித்ராவின் தந்தை காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.