Bigg Boss Season 8 Tamil: "வந்தாச்சு புது பிக் பாஸ்".. அடடே யாருமே எதிர்பார்க்கலையே.. விஜய் சேதுபதி அசத்தல்..!

கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொண்டதாக அறிவித்ததைத்தொடர்ந்து, பிக் பாஸ் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார்.

Bigg Boss Tamil Season 8 (Photo Credit: @VijayTelevision X)

செப்டம்பர் 04, சென்னை (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளில், கடந்த 7 ஆண்டுகளாக மக்களின் மனதை வென்ற நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் (Bigg Boss Tamil). ஹிந்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிகழ்ச்சி, விஜய் டிவி (Vijay Television) நிர்வாகத்தால் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் எனப்படும் வீட்டுக்குள் செல்போன் உட்பட எந்த விதமான தொழில்நுட்பமும் இல்லாமல் அடைக்கப்பட்டு, பின் அவர்களில் சிறந்தவரை போட்டி வைத்து தேர்வு செய்யப்படும்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்:

மொத்தமாக 104 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் இருப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து, அதனை 1 - 1.5 மணிநேர நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும். ஒவ்வொரு சீயசுனிலும் ஒவ்வொரு மாறுதல் என பிக் பாஸ் போட்டியாளர்கள் முதல் வீட்டின் அமைப்பு வரை பல விறுவிறுப்பு கட்டங்கள் அன்பு, பாசம், கோபம், துரோகம் என இனி பிக் பாஸ் வீடே களைகட்டும். அந்த வகையில், கடந்த 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கி இருந்தார். அவர் தனது அரசியல் கருத்தையும் மக்கள் முன்பு பிரதிபலிக்க பிக் பாஸ் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கி இருந்தது. Nivin Pauly: பிரேமம் புகழ் நடிகர் நிவின் பாலி மீது பாலியல் குற்றச்சாட்டு: அடுத்த அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்.!

விஜய் சேதுபதி (Vijay Sethupathi) என்ட்ரி:

இதனிடையே, சமீபத்தில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த ஆண்டு தன்னால் தொகுத்து வழங்க இயலாது என அறிவித்தார். இதனால் விஜய் டிவி நிர்வாகம் புதிய பிக் பாஸை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி பிக் பாஸாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக விஜய் டிவியின் சமூக வளைத்தபக்கத்தில் விடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி ஒவ்வொரு நாளும் பல வீடுகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். விரைவில் பிக் பாஸ் தொடங்கும் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றியாளர்களை நினைவிருக்கா?

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தமட்டில் முதலில் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி அர்ஜுனன், ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகன், ஆறாவது சீசனில் முகம்மது நசீம், ஏழாவது சீசனில் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் வெற்றிவாய்ப்பை பெற்று இருந்தனர். மக்கள் மத்தியில் பிரபலமாக நடத்தப்படும் ரியாலிட்டி ஷோ, ஒருசில நேரங்களில் மிகப்பெரிய அளவிலான கண்டனத்தை பெற்றாலும், அதன் வரவேற்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து 100 நாட்கள் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எட்டாவது சீஸனின் வெற்றியாளரை எதிர்நோக்கி தமிழகமே காத்திருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8ஐ தொகுத்து வழங்கப்போகும் விஜய் சேதுபதி:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif