Viduthalai Part 2: இன்று திரையரங்குகளில் வெளியாகிறது விடுதலை பாகம் 2: சிறப்புக்காட்சிக்கு அனுமதி.!
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய விடுதலை முதல் பாகத்தைத் தொடர்ந்து, இன்று படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகிறது.
டிசம்பர் 20, கோடம்பாக்கம் (Cinema News): படிக்காதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன், வடசென்னை ஆகிய படங்களை தமிழ் திரையுலகுக்கு வழங்கி மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran), கடந்த 31 மார்ச் 2023ல் விடுதலை பாகம் 1 (Viduthalai Part 1) படத்தை வெளியிட்டு இருந்தார். ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம், ரூ.60 கோடிகளை கடந்து வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது.
பாராட்டுகளை பெற்ற திரைப்படம்:
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மோகன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சேட்டன் உட்பட பலரும் நடித்திருந்தனர். ஆர்.எஸ் இன்போடைன்மெண்ட் தயாரிப்பில், இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், ராமர் படத்தொகுப்பில் படம் உருவாகி வெளியானது. படம் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் 10 நிமிட தொடர் கைதட்டுகளையும் பரிசாக பெற்றது. Kadhalikka Neramillai Second Single: "இது காதல் என்றால் பொய்யா.. அது இல்லை என்றால் மெய்யா.." காதலிக்க நேரமில்லை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு.!
விஜய் சேதுபதி பாகம்:
இதனைத்தொடர்ந்து, விடுதலை படம் 2 பாகமாக எடுக்கப்பட்டது என முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், கதையின் முக்கிய கதாபத்திரமான விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது. இந்த பாகம் முன்னதாகவே ரோட்டர்டேம் திரைப்பட விழா நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டாலும், தற்போது தான் திரையரங்கில் வெளியாகிறது. படத்தில் சில மாறுதல்களும் செய்யப்பட்டுள்ளன.
இன்று படம் வெளியாகிறது:
அதன்படி, 20 டிசம்பர் 2024 இன்று விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியாகிறது. இன்று ஒருநாள் காலை 9 மணிமுதல் படத்தை திரையிட்டுக்கொள்ள தமிழ்நாடு அரசும் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், கிஷோர், ராஜீவ் மோகன், போஸ் வெங்கட், ரவி மரியா, பிரகாஷ் ராஜ் உட்பட பலரும் நடித்துள்ளனர். இன்று படம் வெளியாகிறது. திரை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி, படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வெற்றிமாறனின் தனித்துவ படைப்பாக உருவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படம் மீண்டும் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலை பாகம் 2 திரைப்படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன்: