Road Accident: திடீரென சாலையை கடந்த பள்ளி மாணவர், பைக் மோதி படுகாயம்.. நெஞ்சை பதறவைக்கும் காணொளி..!

கர்நாடகாவில் சாலையைக் கடக்கும் போது வேகமாக வந்த பைக் மோதி, சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Boy injured in Bike Accident (Photo Credit: @PTI_News X)

நவம்பர் 28, மங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், மங்களூரு (Mangaluru) எல்லையான மஞ்சேஷ்வர் பகுதியில் உள்ள பாலியூரில் சாலையைக் கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி, 7 வயது சிறுவன் படுகாயமடைந்தார். உடனே, அருகில் இருந்த நபர் விரைந்து ஓடிச்சென்று சிறுவனை மீட்டார். மேலும், பின்னாடி வந்த பேருந்தை ஓட்டுநர் நிறுத்தி வைத்து சிறுவனுக்கு உதவி செய்யும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. Couple Arrested: 4 வயது குழந்தையை விற்க முயன்ற தம்பதி.. 6 பேர் அதிரடி கைது..!

இதனையடுத்து, படுகாயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சாலையைக் கடக்கும் போது, சிறுவன் மீது பைக் மோதிய சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: