Family Murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூர கொலை.. அதிகாலையில் நேர்ந்த துயர சம்பவம்..!
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகளை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 04, டெல்லி (Delhi News): தெற்கு டெல்லியில் உள்ள நெப் சராய் (Neb Sarai) பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் தன்வார் (வயது 55). இவர், தனது மனைவி கோமல் (வயது 47), மகள் கவிதா (வயது 23) மற்றும் மகன் அர்ஜீன் ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (டிசம்பர் 04) காலை 5 மணியளவில் நடைபயிற்சிக்கு சென்ற மகன் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். Telangana Earthquake: தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு..!
அப்போது வீட்டுக்குள் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரி மூவரும் கத்தியால் (Murder) குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகன் கதறி அழுதுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பார்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.