டிசம்பர் 04, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா, ஆந்திராவில் பல மாவட்டங்களில் இன்று காலை 7.27 மணியளவில் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. தெலுங்கானாவில், ஐதராபாத், கம்மம், ஹனுமகெண்டா, கொத்தகுடேம், பத்ராத்ரி மாவட்டங்களிலும், ஆந்திராவில் விஜயவாடா, ஜக்கையாபேட்டை, கம்பாலகுடேம், திருவூரு மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது. Balloon Stuck In Throat: தொண்டையில் பலூன் சிக்கி 13 வயது சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர்களே உஷார்..!
இதனையடுத்து, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், குடியிருப்பு வாசிகள் விழிப்புடன் இருக்கவும் பூகம்பங்கள் ஏற்படும் போது நெரிசலான இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். தெலங்கானாவின் பல பகுதிகள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தின் முலுகு (Mulugu) மாவட்டத்தில், பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
தெலுங்கானா நிலநடுக்கம்:
#Telangana: An #earthquake of 5.3 magnitude occurred at 7:27 AM on Wednesday, with the epicenter in Mulugu, Telangana. pic.twitter.com/dgIUV3Mx2w
— Sumit Jha (@sumitjha__) December 4, 2024