Viral Video: ரயிலில் லேடிஸ் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபரால் பரபரப்பு.. அலரியடித்த பெண்கள்..!
மும்பை புறநகர் ரயிலில் பெண்கள் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபரால் பெரும் பரபரப்பு நிலவியது.
டிசம்பர் 18, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் (Mumbai) நேற்று முன்தினம் (டிசம்பர் 16) சிஎஸ்எம்டி கல்யாண் விரைவு ஏசி புறநகர் ரயிலில் (CSMT-Kalyan AC Local Train) பெண்கள் பெட்டியில், ஆண் ஒருவர் நிர்வாணமாக உள்ளே வந்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 4.11 மணிக்கு சிஎஸ்எம்டி-கல்யாண் ஏசி உள்ளூர் ரயில் காட்கோபர் நிலையத்தை நோக்கி வரும் போது இச்சம்பவம் நிகழ்ந்தது. Fire Accident: வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியான சோகம்..!
ரயிலில் நிர்வாணமாக ஏறிய நபர்:
இதனைப்பார்த்த பெண்கள் கூச்சலிட்டனர். உடனே விரைந்து வந்த டிக்கெட் பரிசோதகர் அவரை வெளியேற்றினார். இந்த 32 வினாடி வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய அந்த நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.