Fire Accident In Jammu Kashmir (Photo Credit: @PTI_News X)

டிசம்பர் 18, ஸ்ரீநகர் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் தூங்கி கொண்டு இருந்தனர். இந்நிலையில், அந்த வீட்டில் இன்று (டிசம்பர் 18) அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து (House Fire) ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். Tribal Man Dragged Along Road: நடுரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர்.. பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

பயங்கர தீ விபத்து:

தகவலறிந்து வந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இவர்கள் 4 பேரும் கரும்புகையை சுவாதித்ததால், மூச்சுத்திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் ஆய்வு செய்த காவல்துறையினர்: