Viral Video: மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி அட்டூழியம்.. வீடியோ வைரல்..!
ஐதராபாத் மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி முத்தமிடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
டிசம்பர் 30, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் (Hyderabad) நகரின் சைதன்யபுரியில் இருந்து எல்பி நகருக்கு (Chaitanyapuri To LB Nagar) மெட்ரோ ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அதில் பயணம் செய்த காதல் ஜோடி, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவரும் முத்தம் கொடுத்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், காதல் ஜோடி (Love Couple) முத்தம் கொடுப்பதை வீடியோவாக பதிவு செய்தனர். Fake Kidnapping Case: அதிகரித்து வரும் பிடிஎஸ் மோகம்.. கொரியா கிளம்பிய பள்ளி மாணவிகள்..!
மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி அட்டூழியம்:
இதனையடுத்து, இந்த வீடியோவை ரயில்வே அதிகாரிகளிடம் கொடுத்து புகார் அளித்தனர். இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இச்சம்பவம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.