டிசம்பர் 30, தாராஷி (Maharashtra News): தற்போது உள்ள காலகட்டத்தில் இளைய தலைமுறைகள் அனைவரும் பல்வேறு விதத்தில் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகி உள்ளனர். அந்த வகையில், பிடிஎஸ் (BTS) என்ற கொரிய பாடலுக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களின் வீடியோக்களை செல்போனில் அதிகம் பார்த்து, அதில் அவர்கள் முழுவதுமாக அடிமையாகி வருகின்றனர். பெரும்பாலும், இளம்பெண்கள் அதில் அதீத ஈடுபாட்டுடன் இருந்து வருகிறார்கள்.
பிடிஎஸ் மோகம்:
பிடிஎஸ் என்ற கொரிய பாடகர்களான ஆர்எம், ஜின், சுகா, ஜே ஹோப், ஜிமின், வி, ஜங் கூக் என இவர்களின்மேல் நம் இளம் தலைமுறை பெண்கள் அடிமையாகி விட்டனர். இந்த இளம் இசை கலைஞர்களின் உடைகள், நடனம் மற்றும் சிகை அலங்காரம் என அனைத்தும் இன்றைய இளம் பெண்களை வெகுவாக கவர்கிறது. பெரும்பாலும், பள்ளியில் படிக்கும் மாணவிகளும் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் இதற்கு அடிமையாகி, தனக்கு வரப்போகும் கணவன் இவர்களில் ஒருவரை போன்று இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். மேலும், பல கல்லூரி மாணவிகள் இந்த வீடியோக்களை தொடர்ந்து பார்த்து அதில் இருந்து வெளியே வர இயலாமல் அவர்களின் மீது அதீத ஆசை கொண்டு உள்ளனர். Maa Saraswati River: போர்வெல் போடும்போது ஏற்பட்ட அதிசியம்; பெருக்கெடுத்து ஓடிய நீர்.. பாலைவனத்தில் இப்படியா?
பெற்றோரை கலங்க வைத்த மாணவிகள்:
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவின் உமர்கா தாலுகாவைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகள் கொரிய பிடிஎஸ் இசைக்குழுவை சந்திக்க, வீட்டில் பணத்தை திருடிவிட்டு உமர்காவிலிருந்து புனே சென்ற்றுள்ளனர். அங்கு சென்றதும், சோலாப்பூரில் உள்ள மோஹோலில் இருந்து தங்களது தந்தைக்கு போன் செய்து, தங்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகாரளிக்க, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை நடத்தினர்.
இதையடுத்து சோலாப்பூரில் சிறுமிகளை காவல் துறையினர்தடுத்து நிறுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். எதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தீர்கள் என விசாரித்தபோது, தென்கொரியா நாட்டைச் சேர்ந்த இசைக் குழுவான பி.டி.எஸ். குழுவின் வீடியோக்களை பார்த்து அதில் மூழ்கி அவர்களைக் காண்பதற்காக கொரியா செல்ல புறப்பட்டோம் எனத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.