Suman About Sivaji Movie: பெண்கள் என்னை கூப்பிட்டு பாராட்டினார்கள் - சிவாஜி படத்தில் நடித்த அனுபவம் குறித்து கலகலப்பாக மனம் திறந்த சுமன்..!

அவரின் நடிப்பு படத்தின் வெளியீட்டுக்கு பின் பலராலும் புறப்பட்டது.

Actor Suman | Superstar Rajinikanth Shivaji Movie Visual (Photo Credit: WIkipedia | Twitter)

ஜூன் 16 , சென்னை (Cinema News): நடிகர் ரஜினிகாந்த், சுமன், ஷ்ரேயா சரண், விவேக், நயன்தாரா, ரகுவரன், மணிவண்ணன், கொச்சின் ஹனீபா, மயில்சாமி, சின்னி ஜெயந்த், லிவிங்ஸ்டன், சண்முகராஜன், முத்துக்காளை உட்பட பல நடிகர்கள் நடித்து கடந்த 2007-ல் வெளியான திரைப்படம் சிவாஜி. இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். ரூ.80 கோடி பட்ஜெட்டில் தயாரான சிவாஜி திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் மகத்தான வெற்றி பெற்று ரூ.160 கோடி வசூல் செய்தது.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 2 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். படம் வெளியான சமயத்தில் வணிக ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் ஏகபோக வெற்றியை அடைந்தது. படம் அன்றைய சூழ்நிலைக்கேற்ப எடுக்கப்பட்டாலும், அவற்றின் வீரியம் இன்று வரை இருக்கிறது. படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்து வழங்கியது, இசையமைப்பு பணிகளை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டு இருந்தார்.

படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் சுமன் நடித்திருந்தார். அவரை வில்லன் கதாபாத்திரத்தில் அடியெடுத்து வைக்க முக்கிய காரணமாகவும், அவரின் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை தந்த படமாகவும் சிவாஜி படம் அமைந்தது. நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பை விட, ஆதிசேஷன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுமன் கதாபாத்திரம் பலராலும் புறப்பட்டது.

இந்த விஷயம் குறித்து மனம்திறந்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த நடிகர் சுமன் கூறுகையில், "எனக்கு இயக்குனர் சங்கரின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. சிவாஜி படத்தில் நடிக்க அழைப்பதாக போனில் பேசினார்கள். நான் ஏற்கனவே செய்தி தாள்களில் சிவாஜி படத்திற்கு வில்லன் நடிகர் வேறு சிலராக இருக்கலாம் என எழுதப்பட்டு இருந்தது. அதனை கூறினேன். அவர்கள் நீங்கள்தான் வில்லன் கதாபாத்திரம் செய்யவேண்டும் என ஷங்கர் விருப்பப்படுகிறார். அலுவலகத்திற்கு வாருங்கள் என கூறினார்கள்.

வில்லன் கதாபாத்திரம் என்றதும் நான் சரி என கூறினேன். ஆனால், அதுவரை நான் வில்லன் கதாபாத்திரம் நடித்ததில்லை என்பதால் அவர்களுக்கும் சிறு தயக்கம். நான் நடிக்க ஒப்புக்கொண்டதும், கதையை கூற முன்வந்தார்கள். நான் ஷங்கர் சாரின் படம் என்பதால் கதாபாத்திரம் நமக்கு இருக்கிறது, நமக்கு வேண்டாம் என கூறினேன். அவர்கள் சார் சொல்லச்சொல்லி இருக்கிறார் என கதையை கூறினார்கள். நானும் அதனை கேட்டேன், நன்றாக இருந்தது.

அப்போது ஷங்கர் சார் ஊரில் இல்லை என்பதால், அவர் வந்த பின்னர் அலுவலகத்தில் வைத்து பேசினோம். கதைக்காக எனது முகத்தை எப்படி மாற்றலாம் என பேச்சுவார்த்தை நடந்தது. மீசையை எடுப்பீர்களா? என சங்கர் சார் கேட்டார். செயற்கையாக பல், கண்ணனுக்கு கருப்பு கண்ணாடி ஆகியவற்றை வாங்கி போட்டோசூட் நடந்தது. அவருக்கு எனது கதாபாத்திரம் படத்திற்கு நன்கு ஒத்துப்போகும் என முடிவானதால் நடிக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. எனக்கு நடிக்க நாட்களும் ஒதுக்கப்றட்டன.

இடையில் நான் நடிகர் ரஜினிகாந்துக்கு தொடர்பு கொண்டு, அண்ணா உங்களின் படத்தில் நடிக்க அழைத்தார்கள் என கூறினேன். அவர் நீ என்ன சொன்னாய்? என கேட்டார். நான் ஒப்புக்கொண்டேன் என்றேன். அதற்கு ரஜினி அண்ணன், "நீ நல்லது செய்திருக்கிறாய். இந்த படம் உனக்கு சரியாக இருக்கும். உன்னை நல்ல நிலைக்கு அழைத்து செல்லும். படத்தில் நீ நடித்ததும் என்னை விட 10% கூடுதல் வரவேற்பு உனக்கு இருக்கும். நல்லபடியாக நடித்துக்கொடு" என கூறினார். நானும் உங்களின் ஆசீர்வாதம் என கூறி அழைப்பை துண்டித்தேன்.

எனக்கு சிவாஜி படத்தில் கிடைத்த நல்ல வரவேற்புக்கு காரணம் ஷங்கர் சார் மற்றும் ரஜினிகாந்த் அண்ணா தான் காரணம். ரஜினிகாந்த் அண்ணா சரியாக சொன்னார் இந்த படம் ரஜினி - சுமன் என்பதை போல இல்லாமல், சிவாஜி - ஆதிசேஷன் என்ற அளவில் இருக்கிறது. சரியாக உள்ளது என்றார். படத்தை அனைவரும் சத்யாவில் பார்த்தோம். பெண்களும் என்னை வந்து வாழ்த்தினார்கள். எனக்கு உண்மையில் பெருமையாக இருந்தது.

அந்த படத்திற்கு பின்னர் பல நடிகர்களுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். நான் கேமராமேன் கே.வி ஆனந்த், ஷங்கர் சார், ரஜினி சார், தயாரிப்பு நிறுவனம், சிவாஜி பட குழுவினர் அனைவர்க்கும் எனது நன்றிகள் தான். சிவாஜி படத்தின் வெளியீடுக்கு பின்னரே எனது திரையுலக வாழ்க்கை மற்றொரு உச்சத்தில் சென்றது" என பேட்டியில் கூறினார்.

சிவாஜி திரைப்படம் வெளியான காலகட்டத்தில் மக்களிடையே கருப்பு பண விவகாரம் குறித்த விழிப்புணர்வையும் அவை ஏற்படுத்தின. இந்த படம் பல விருதுகளையும் வென்று குவித்தது. இந்திய அளவிலும், உலகளவிலும் மெகாஹிட் அடித்த திரைப்படமாகவும் 2007 காலங்களில் இருந்தது.

Actor Suman Speech Video Thanks: IndiaGlitz