Eating Dal Benefits: அன்றாடம் நாம் சாப்பிடும் பருப்பு வகைகளில் இவ்வுளவு நன்மையா?.. எந்தெந்த பருப்பில் என்னென்ன சத்துக்கள்?.. தெரிஞ்சிக்கோங்க..!

தினசரி சமையலில் அல்லது வாரம் ஒருமுறை நாம் கட்டாயம் உபயோகம் செய்யும் பருப்பு வகையில் உள்ள நன்மைகள் குறித்து இன்று காணலாம்.

Toor Dal, Green Dal, Chickpea (PC: Pixabay)

டிசம்பர், 22: நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் பலவகை சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. அவற்றில் உடலுக்கு கூடுதல் நன்மைகளை தரக்கூடிய ஊட்டச்சத்து, தாதுக்கள் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. இன்று நாம் சாப்பிடும் உணவுகளில் பருப்பு வகைகளில் (Indian cuisine, dal) உள்ள சத்துக்கள் குறித்து காண்போம்.

துவரம் பருப்பு: சாம்பார் போன்ற குழம்பு வகைகளில் பிரதானமாக உபயோகம் செய்யப்படும் துவரம் பருப்பில் புரோட்டீன், போலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துளளன. இவை மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கவும் உதவி செய்கிறது.

பாசிப்பருப்பு: வேகவைத்து தாளித்து சுவையாக நாம் சாப்பிட விரும்பும் பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துக்களும் நிறைந்துளளன. இவை உடல் எடையை குறைக்க பேருதவி செய்யும்.

பச்சைப்பயறு: நாம் சாப்பிடும் உணவுகள் உடலில் இருந்து எளிதாக செரிமானமாவதை உறுதி செய்ய பச்சைப்பயறு உதவுகிறது. இது உடல் எடையை குறைக்கவும், உடலில் இருந்து கேடான கொழுப்புகள் வெளியேறவும் பயன்படுகிறது. UN Security Council: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா முயற்சி; ஏகமானதோடு ஆதரவு கூறிய ரஷியா.! 

கொண்டைக்கடலை: இதயம் தொடர்பான நோய்களை குறைக்க கொண்டைக்கடலை பேருதவி செய்கிறது. அதுமட்டுமல்லாது உடல் சக்தியையும் அதிகரிக்க உதவி செய்கிறது.

மைசூர் கொண்டக்கடலை: மைசூர் பகுதியில் விளையும் பருப்பில், மண்சார்ந்த சத்துக்கள் காரணமாக அவை மைசூர் பருப்பு என்று அழைக்கப்படுகிறது. மைசூர் பருப்பு உடலின் இரத்த ஓட்டத்தை உடல் உறுப்புகளுக்கு சீராக கொண்டு செல்ல உதவி செய்கிறது. இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

கடலைப்பருப்பு: உடல் வலுப்பெறுவதற்கும், நீரிழிவு போன்ற நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றவும் கடலைப்பருப்பு பேருதவி செய்கிறது.

சிவப்பு காராமணி: தமிழகத்தில் உள்ள மக்களால் அதிகளவு விரும்பி சாப்பிடப்படும் பருப்பு வகையில் சிகப்பு காராமணி பயிருக்கு தனியிடம் உண்டு. இந்த சிவப்பு காராமணி புற்றுநோய், கொழுப்புகளை தடுக்கும். இதில் இருக்கும் வைட்டமின் கே மூளை செயல்பாடுகளை சீராக்கும்.

தட்டை பயறு: தென்மாவட்ட காரக்குழம்புகளில் சேர்க்கப்படும் தட்டைப்பயறு கரையக்கூடிய நார்சத்து கொண்டது ஆகும். இது இதயநோயை தடுக்கும். தட்டைப்பயறில் இருக்கும் பொட்டாசியம், இரும்புசத்து, வைட்டமின் சி, ஜின்க் போன்றவை உடலுக்கு நன்மை தரும் சத்துக்கள் ஆகும்.

உளுத்தம் பருப்பு: இட்லி, தோசை போன்ற உணவுகளை சமைக்க பிரதானமாக பயன்படுவது உளுந்தம்பருப்பு. சமையலின் தொடக்கத்தில் தாளிக்கவும் கடுகோடு சேர்க்கப்படும். இதில் குறைந்தளவு கொழுப்பு, அதிகளவு புரோட்டீன், நார்சத்து போன்றவை நிறைந்துள்ளன. வைட்டமின்கள், கனிமச்சத்துக்களும் இருக்கிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 22, 2022 03:03 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).