Bihar Shocker: படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்ததாக அறிவிப்பு; பீகாரில் சோகம்.. பெற்றோர் கண்ணீர்.!

மாணக்கர்கள் பயணம் செய்த படகு ஆற்றில் கவிழ்ந்து பீகாரில் நடந்த விபத்தில், 12 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலரின் உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Muzhaffarpur Accident (Photo Credit: ANI)

செப்டம்பர் 15, முஸாபர்பூர் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டம், பெனிபெட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 30 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் படகில் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த படகு திடீரென நிலைதடுமாய் கவிழ்ந்துவிட, படகில் பயணித்த மாணாக்கர்கள் உயிருக்கு போராடி தத்தளித்து இருக்கின்றனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில மற்றும் தேசிய மீட்புப்படை அதிகாரிகள், உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். OTT Influence on Cinema: போட்டி போட்டுக் கொண்டு படங்களை வாங்கும் ஓடிடி நிறுவனங்கள்: படங்களின் வெளியீட்டில் தலையீடு.!

தற்போது வரை 10க்கும் அதிகமானோர் மீட்கப்பட்ட நிலையில், 12 குழந்தைகள் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாகவும் அச்சம் எழுந்துள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் காமினி குமாரி, சுஷ்மிதா குமாரி, பேபி குமாரி, சாஸ்ட்டா பனோ, காந்தி தேவி, அஸ்மட், ரிதேஷ் குமார், சிவாஜி சவுபால், சமஸுல், வசீம், மிண்டு, பிண்டு ஆகியோர் என அடையாம் காணப்பட்டுள்ளனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement