Superfast Express Train Derail: அதிவேக விரைவு இரயில் தடம்புரண்டு பயங்கர விபத்து: 4 பேர் பலி., 50 பேர் படுகாயம்.. பீகாரில் நடந்த சோகம்.!
50 பேர் படுகாயம் அடைந்தனர்.
அக்டோபர் 12, பக்ஸர் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பக்ஸர் மாவட்டம் (Buxar, Bihar), ரகுநாத்பூர் (Raghunathpur) இரயில் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நேற்று இரவு 10:30 மணியளவில் புதுடெல்லியில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள காமக்யா நோக்கி பயணித்த (வ.எண் 12506) வடகிழக்கு அதிவேக விரைவு (North East Express Train) இரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் இரயிலின் 21 பெட்டிகளும் தடம்புரண்டன. பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை எனினும், 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் விரைந்து வந்து மக்களுக்கு உதவி செய்தனர். காயமடைந்தோர் பரம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Sour food Side effects: புளிப்பு உணவுகள் ரொம்ப பிடிக்குமா உங்களுக்கு? இந்த விளைவுகளை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!
நலமுடன் இருப்போர் மாற்று இரயில்கள் மற்றும் பேருந்துகளில் முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை பக்ஸர் தொகுதியின் எம்.பி மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபெ, நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.
தற்போது இரயில் பெட்டிகளை மீட்கும் பணிகள், தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விபத்திற்கான காரணம் குறித்து துறைரீதியிலான உயரதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிகழ்விடத்திற்கு வருகிறார்.