Ravi Kishan Daughter: அக்னிவீர் திட்டத்தின் கீழ், தனது மகளை நாட்டிற்கு அர்ப்பணித்த பாஜக எம்.பி; இராணுவ அதிகாரியாக பதவியேற்பு.!

தெலுங்கு திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக அறியப்பட்ட ரவி கிஷனின் மகள் இராணுவத்தில் இணைந்து இருக்கிறார்.

BJP MP & Actor Ravi Kishan With Daughter Isha Sukla (Photo Credit: Twitter)

ஜூன் 28, கோரக்பூர் (Uttar Pradesh): போஜ்புரி, ஹிந்தி, தெலுங்கு திரையுலக நடிகரும், பாஜக எம்.பியுமானவர் ரவி கிஷன். இவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவரின் மகள் இஷா சுக்லா.

நாட்டின் மீது பற்றுக்கொண்ட இஷா, இராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று சிறுவயதில் இருந்து ஆர்வம் கொண்டு வந்துள்ளார். தந்தை திரைப்பட நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறினாலும், அவரின் மகள் சிறுவயதில் இருந்தே இராணுவத்தின் மீது ஆசை வைத்துள்ளார்.

இதனையடுத்து, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த அக்னிவீர் திட்டத்தின் மூலமாக தேர்வு எழுதிய இஷா சுக்லா, அதில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று முடித்துவிட்டார். தற்போது அவர் இராணுவ அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கிறார். Prithviraj Sukumaran: படப்பிடிப்பில் படுகாயமடைந்த நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன்; நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

Instagram Post Isha Sukla an Army Officer by Agniveer Scheme (Photo Credit: Instagram)

இதன் வாயிலாக அக்னிவீர் திட்டத்தின் முறைப்படி 4 ஆண்டுகளில் பயிற்சி 6 மாதங்கள் போக, மீதமுள்ள 3.5 ஆண்டுகள் இராணுவ அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேற்படி இராணுவ அதிகாரியாக தொடர விருப்பினால், அவர்களின் தகுதிக்கேற்ப இராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்படும்.

திரையுலகம் மற்றும் அரசியல் பிரமுகர்களாக இருக்கும் பலரும் தங்களின் பிள்ளைகளை கஷ்டப்படாத வேலை அல்லது தனது பணத்தை வைத்து தொழில் செய்ய உதவும் நிலையில், நாட்டின் மீது பற்றுக்கொண்ட மகளை அவரின் விருப்பப்படி தந்தை இராணுவத்தில் இணைய அனுமதி வழங்கியது பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்தியாவின் மீது அக்கறை கொண்ட பல பிரபலங்களும் தங்களின் பிள்ளைகளில் ஒருவரை நாட்டிற்காக எல்லையில் நிறுத்த முயற்சித்தால் இந்திய ஒற்றுமை மேலும் தழைத்தோங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.