IPL Auction 2025 Live

Modi Govt Block 14 Mobile Messenger Apps: 14 மெசேஜிங் ஆப்-களை முடக்கியது மோடியின் தலைமையிலான மத்திய அரசு.. அதிரடி நடவடிக்கையின் பகீர் பின்னணி.!

இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் பல்வேறு சதிச்செயலை பல வழிகளில் மேற்கொண்டு வந்தாலும், அவற்றை மத்திய அரசு உளவுத்துறை முன்பே கண்காணித்து பல்வேறு எச்சரிக்கைகளை வழங்கி சதிச்செயலை தவிர்க்க உதவுகிறது.

Narendra Modi | Central Govt | Mobile Apps (Photo Credit: Live Mint / Wikipedia / etb2bimg.com)

மே 01, புதுடெல்லி (New Delhi): இந்திய (India) திருநாட்டை நிம்மதியாக உறங்க விடக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்து வரும் பாகிஸ்தான் (Paksitan) நாடு ஜம்முவின் எல்லையில் இராணுவத்திற்கு (Border Security Force India) தொந்தரவு கொடுத்தாலும், நாட்டிற்குள் பயங்கரவாதிகள் (Terrorist) தங்களின் ஆதரவாளர்களோடு சேர்ந்து பல சதிச்செயலை தீட்டினாலும் அதனை அரசு கண்டறிந்து இயன்றளவு தடுத்து வருகிறது.

சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடந்துவிடும் பட்சத்தில், அதற்கடுத்தபடியாக அரசு எடுக்கும் நடவடிக்கை உலகளவில் கவனிக்கப்படுகிறது. புல்வாமா (Pulwama) பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் (Indian Army Officers) கொல்லப்பட்டுவிட, பாகிஸ்தான் மண்ணுக்கு சென்று இந்திய விமானப்படை எதிரிகளை அழித்து வந்தது. Ajithkumar 62 Movie: வலிமை நாயகனின் “விடாமுயற்சி” – அஜித் குமாரின் அடுத்த படத்தை உறுதி செய்த லைகா நிறுவனம்.!

பயங்கரவாதிகள் தங்களது ஆதரவாளர்களை இந்தியாவிற்குள் மறைமுகமாக வைத்து செயல்படுவது அவர்களுக்கு சதிச்செயலை அரங்கேற்ற உதவுகிறது என்றாலும், இன்றுள்ள தொழில்நுட்பத்தில் அவர்களின் முயற்சி பெரும்பாலும் கண்டறியப்பட்டு உளவுத்துறையால் எச்சரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பயங்கரவாதிகள் தங்களது ஆதரவாளர்களோடு மறைமுகமாக பேசி சதித்திட்டம் தீட்ட உதவி செய்ததாக 14 க்கும் மேற்பட்ட செயலிகள் பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi, Threema போன்ற செயலிகள் அடையாளம் காணப்பட்டு, அவை தடை செய்யப்பட்டுள்ளன.

மேற்கூறிய செயலிகள் உங்களது செல்போனில் தவறுதலாக பதிவிறக்கம் செய்திருக்கும் பட்சத்தில், அதனை நீங்கள் இனி உபயோகம் செய்ய இயலாது.