ICSE Results 2023 On cisce.org: ICSE தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது; அதிகாரபூர்வ அறிவிப்பு..!
10 ம் வகுப்பு தேர்வை 2,31,063 மாணவர்கள் எழுதினர். 12 ம் வகுப்பு தேர்வை 2.5 இலட்சம் பேர் எழுதினர்.
மே 13, புது டெல்லி (New Delhi): இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் (The Council for the Indian School Certificate Examinations CISCE) கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 29ம் தேதி நடைபெற்று முடிந்தது.
இந்த தேர்வு முடிவுகள் மே 13ம் தேதியான இன்று வெளியாகவுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் results cisce.org என்ற பக்கத்திற்கு சென்று, அவர்களின் பதிவு எண் வைத்து அறிந்துகொள்ளலாம். இன்று மதியம் 3 மணிக்கு தேர்வு முடிவுகள் இணையங்களில் வெளியாகிறது. MI Vs GT: வான்கடே மைதானத்தை அதிரவைத்த சூரியகுமார் யாதவ்.. நின்ற இடத்தில் 80 ரன்கள், 103 க்கு நோ அவுட்.!
SMS வாயிலாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள 09248082883 என்ற எண்ணுக்கு ICSE என்ற அமைப்புடன் உங்களின் பதிவெண்ணை சேர்த்து அனுப்பினால் உங்களின் மதிப்பெண் பாட வாரியாக அனுப்பி வைக்கப்படும். Ex: ICSE 1485237 என்று அனுப்பினால் உங்களின் மதிப்பெண் பாட வாரியாக அனுப்பப்படும்.
கடந்த பிப்ரவரி 27ல் தொடங்கி நடைபெற்ற ICSE தேர்வு முடிவுகள் இன்று மாலை 3 மணியளவில் வெளியாகின்றன. 10 ம் வகுப்பு தேர்வை சுமார் 2,31,063 மாணவர்களும், 12 ம் வகுப்பு தேர்வை 2.5 இலட்சம் மாணவர்களும் எழுதியுள்ளனர்.