Corona Vaccine: கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் பக்கவிளைவு ஏற்படுகிறதா?.. ஐசிஎம்ஆர் பரபரப்பு பதில்..!
கோவிட் 19 தடுப்பூசிகளை பயன்படுத்துவதால் (The Eonomic Times Report Claims Covid19 Vaccine Side Effect) பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என ஐசிஎம்ஆர் மற்றும் சிடிஎஸ்சிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 17, புதுடெல்லி: கோவிட் 19 தடுப்பூசிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக தி எக்னாமிக் டைம்ஸ் (The Economic Times) ஊடகம் வெளியிட்ட தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR - ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO - சிடிஎஸ்சிஓ) அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
அதாவது, ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள பதிலில், கோவிட் 19 தடுப்பூசி தொடர்பாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization - WHO), நோய் கட்டுப்பாட்டு மையம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இணைய தள முகவரிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
இதர தடுப்பூசிகளோடு ஒப்பிடும் போது கோவிட் 19 தடுப்பூசிகளை (Corona Vaccine) செலுத்திக் கொண்டவர்கள், தடுப்பூசி செலுத்திய இடத்தில் வீக்கம், வலி, தலைவலி, தசைவலி, மயக்கம், காய்ச்சல், குளிர் மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட அறிகுறிகளை மிகக்குறைந்த அளவில் உணர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒரு சிலர் மட்டுமே இந்த அறிகுறிகளின் பாதிப்பை பெருமளவில் எதிர்கொண்டிருப்பதும் தெரியவந்தது.
கோவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்வது, பெரும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தடுப்பதுடன், இறப்பு விகிதத்தையும் கணிசமாக குறைத்திருப்பதாகவும், நோயின் தீவிரத்தை முறியடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 17, 2022 06:42 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)