Dana Cyclone: 100 கிமீ வேகம்.. தீவிர புயலாக வலுப்பெறுகிறது டானா; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

ஒடிசா - மேற்குவங்கம் மாநிலத்தை சேர்த்து டானா புயல் வரும் அக்.24 அன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dana Cyclone (Photo Credit: mausam.imd.gov.in X)

அக்டோபர் 21, புதுடெல்லி (New Delhi): வங்கக்கடல் பகுதியில், அந்தமான் தீவுகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயல் வரும் அக்.24 அன்று மேற்குவங்கம் - ஒடிசா மாநிலங்கள் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அம்மாநிலங்களில் அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. L Murugan: அருந்ததியர் உள்ஒதுக்கீடு விவகாரம்; எல்.முருகன் பரபரப்பு பேட்டி.. திருமாவளவன் மீது குற்றச்சாட்டு.! 

அதிதீவிர புயலாக மாறுகிறது?

இந்நிலையில், டானா (Tana Cyclone) புயல் தீவிர புயலாக வலுப்பெற்று, 100 - 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒடிசா - மேற்குவங்கம் கடற்கரையை நோக்கி டானா புயல் நகர்வதால், தமிழ்நாட்டுக்கு இதனால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் மட்டுமே தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மழை நீடிக்கும்.

டானா புயல் நகர்வுகளை Windy.com ல் தெரிந்துகொள்ளுங்கள்.