அக்டோபர் 21, மீனம்பாக்கம் (Chennai News): பட்டியலின பிரிவில் இருக்கும் அருந்ததியினருக்கு (Arunthathiyar Reservation), தனியாக உள் ஒதுக்கீடு வழங்கக்கூறி கடந்த 2009ம் ஆண்டுக்கு முன்பு கோரிக்கை இருந்த நிலையில், 2009ல் திமுக (DMK) ஆட்சிக்காலத்தில் 3% உள் ஒதுக்கீடு, அன்றைய மறைந்த முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்டது. இந்த விசயத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி, விசிக தலைவர் திருமாவளவன் (Thirumavalavan) உட்பட சில கட்சியினர் கருத்தியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம்:
இந்த விஷயம் குறித்து உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) அருந்ததியர் உள் ஒதுக்கீடை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்யப்பட்டு, அம்மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்றம் அருந்ததியர் உள் ஒதுக்கீடை அங்கீகரித்தும் இருந்தது. இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "திருமாவளவன் அருந்ததியர் மக்களுக்கு எதிராக இருக்கிறார். அதனால் தான் அவர் அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்தார். அருந்ததியர் மக்களுக்கு இடஒதுக்கீடு ஏன் கொடுக்க வேண்டும் என தகவல் கொடுக்கப்பட்டது. அன்று நான் இளம் வழக்கறிஞராக இருந்தேன். இன்று 12 ஆண்டுகள் போராடி, சட்டரீதியாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருமாவளவன் கூறுவதைப்போல அருந்ததியர் இட ஒதுக்கீடு எளிமையாக கிடைத்திடவில்லை. அருந்ததியின் இட ஒதுக்கீடு குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி கிடையாது. JK Labour Camp Attack: ஜம்மு காஷ்மீரில் கொடூரம்.. மருத்துவர், 5 கட்டுமான பணியாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை.!
அனைவருக்குமான வளர்ச்சியே பாஜகவின் இலக்கு:
அந்தியோதயா என்பது அணைத்து மக்களுமானது என பொருள். அனைத்து சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு. அடிப்படை தொண்டர் கூட உயர்நிலை பொறுப்புகளுக்கு வரவேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி, முன்னேற்றமே பாஜகவின் கொள்கை. நாங்கள் அதில் இருந்து விலகாமல் பணியாற்றி வருகிறோம். ஒண்டிவீரன் பூலித்தேவன் படையில் முக்கியமான நபராக இருந்தவர்கள். அவரின் நினைவுதினத்தை பலரும் கொண்டாடுகிறார்கள். மத்திய அரசு சார்பில் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு தபால் தலை வெளியிட்டு இருக்கிறது. திருமாவளவன் ஒண்டிவீரன், குயிலி நினைவு நாளில் மரியாதை செலுத்த சென்று இருப்பாரா?" என தெரிவித்தார்.
திருமாவளவன் விளக்கம்:
இந்த விசயத்திற்கு விளக்கம் அளித்துள்ள விசிக தலைவர் & எம்.பி தொல். திருமாவளவன், "அருந்ததியர் மக்களுக்கு என்றும் நான் எதிராக இருந்ததில்லை. நான் எந்த விதமான வழக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. விசிக்காவில் அருந்ததியர் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். வாக்குகளை பிரிக்கும் எண்ணத்தில் எல்.முருகன் செயல்பட்டு, இந்த குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் இணை-அமைச்சர் எல்.முருகனின் குற்றச்சாட்டு குறித்து விசிக தலைவர் & எம்.பி தொல். திருமாவளவன் அளித்த விளக்கம் குறித்த காணொளி பின்வருமாறு.,
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில்... pic.twitter.com/U4MBxSMzBO
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 20, 2024