BBC Case: வெளிநாட்டு நிதி முறைகேடு விவகாரத்தில், பிபிசி மீது மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!
கடந்த சில வாரங்களுக்கு முன் பிபிசி அலுவலங்களில் சோதனையும் நடைபெற்று வந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏப்ரல் 13, புதுடெல்லி (New Delhi): கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகளவில் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பி.பி.சி (BBC News), மத்திய அரசுக்கு (Central Govt) எதிராக குஜராத் பைல்ஸ் (Gujarat Files) என்ற ஆவணப்படத்தை எடுத்து வெளியிட இருந்தது. ஆனால், இந்த குஜராத் பைல்ஸ் (Gujarat Riots 2002) கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பானது.
அன்றைய நாளில் குஜராத் முதல்வராக பணியாற்றி வந்த நரேந்திர மோடியின் (Narendra Modi) காலத்தில் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான விவகாரத்தை பல ஆவணங்களை சேகரித்து 2023ல் பிபிசி (BBC India) வெளியிட்டது. முந்தைய காலத்திலும் குஜராத் பைல்ஸ் தொடர்பான குறும்படங்கள் வெளியிட முயற்சி நடந்தபோது தடைக்கான வேலைகளும் நடந்தன.
பிபிசியின் குஜராத் பைல்ஸ் ஆவணப்படத்தை இன்றைய அரசியல் சூழலுக்கேற்ப கையில் எடுத்த எதிர்கட்சிகள், தங்களின் முயற்சியால் பல இடங்களில் அதனை பதிவு செய்து வந்தது. இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. இதனால் பிபிசி - இந்திய அரசு இடையே மோதல் போக்கு நிலவ தொடங்கியது. Summer Season Tips: கோடையும் – குழந்தை பராமரிப்பும்… பெற்றோர்களே இந்த அசத்தல் டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க.!
இதற்குள்ளாக பிபிசியின் குஜராத் பைல்ஸ் போல பாஜக காங்கிரஸ் பைல்ஸ் (Congress Files) என்ற ஆவணப்படத்தை விரைந்து எடுத்து, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அவலங்கள் என வீடியோ வெளியிட்டு வைரலாகி வருகிறது. இந்த அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிபிசி மீது அமலாக்கத்துறை (Enforcement Directorate) வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே குஜராத் பைல்ஸ் நிகழ்வுக்கு பின்னர் பிபிசியின் மீது அமலாக்கத்துறை சோதனை உட்பட பல சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டு நிதியில் நடந்த முறைகேடுகளுக்காக வழக்குப்பதிவு இருக்கிறது.