Female Police Murder: குடும்ப தகராறில் பெண் காவலர் கத்தியால் குத்திக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

கேரளாவில் பெண் காவலர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Female Police Murder in Kerala (Photo Credit: @TheSouthfirst X)

நவம்பர் 22, காசர்கோடு (Kerala News): கேரள மாநிலம், காசர்கோடு (Kasaragod) மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவ்யஸ்ரீ (வயது 35). இவர், சந்தேரா காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, ராஜேஷ் (வயது 40) என்பவருடன் திருமணமாகி 8 வயதில் மகள் உள்ளார். இத்தம்பதிக்கு கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு (Family Dispute) இருந்துள்ளது. இதனால், இவர்கள் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கேரள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Teenager Murder: ரயிலில் இருக்கைக்காக தகராறு.. வாலிபரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன்..!

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று (நவம்பர் 21) நீதிமன்றத்திற்கு வந்தது. விசாரணை முடிந்த பிறகு, திவ்யஸ்ரீ தான் வசித்து வரும் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து, நேற்று மாலை மனைவி வீட்டுக்கு வந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திவ்யஸ்ரீயை சரமாரியாக குத்தினார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யஸ்ரீயின் தந்தை, ராஜேஷை தடுக்க முயன்றார். அப்போது, அவரது தந்தையையும் அவர் கத்தியால் (Murder) குத்தினார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த திவ்யஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த அவரது தந்தை தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜேஷை பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.