Four Students Escape: துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் பார்த்ததால் ஞான உதயம்; சம்பாதிக்க புறப்பட்ட 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள்..!
ஆந்திர பிரதேசத்தில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படம் பார்த்த 4 மாணவர்கள், அவர் போல ஆகவேண்டும் என நினைத்து விடுதியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 11, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் (Visakhapatnam) மஹாராணிபேட்டையில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அவர்களில் சரண் தேஜா, கார்த்திக், ரகு, கிரண்குமார் ஆகிய 4 பேர் பிரபல நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துள்ளனர். அந்த படத்தின் தாக்கம் இவர்கள் 4 பேரையும் அதிகமாக பாதித்துள்ளது. Four Students Drown In Sea: சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. கடலில் மூழ்கி 4 மாணவிகள் பலி..!
இந்நிலையில், லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் கதாபாத்திரம் 4 பேரையும் வெகுவாக ஈர்க்க, அவரை போல வசதிகளுடன் வாழ எண்ணி உள்ளனர். நாங்களும் கார், வீடு உள்ளிட்டவற்றை வாங்கி வருகிறோம் என்று தனது நண்பர்களிடம் கூறிவிட்டு விடுதியில் இருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் அளித்து உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி காட்சி இதோ: