Ajith Kumar (Photo Credit: Instagram)

டிசம்பர் 11, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (Ajith Kumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அஜித் குறித்த ரசிகர்களின் அட்ராசிட்டி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதாவது கடந்த சில மாதங்களாக "கடவுளே அஜித்தே" முழக்கங்கள் எந்த விழாவாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை: இதுதொடர்பாக நடிகர் அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளிகளில், அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‛க..... அஜித்தே'' என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். Bigg Boss Tamil Season 8: "அந்த வேலையை மட்டும் பாருங்க" அருணை கதற விடும் போட்டியாளர்கள்..!

எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசெளகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்து கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்! வாழு & வாழ விடு! அன்புடன் அஜித் குமார்'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை: