டிசம்பர் 10, திருப்பூர் (Tiruppur News): திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரை அடுத்துள்ள லட்சுமி நகர் பகுதியில், கோழி இறைச்சி கடை நடத்திவரும் சிலம்பரசன் என்பவர், தனது மனைவி அகிலாண்டேஸ்வரி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார். நேற்று (டிசம்பர் 09) இரவு வீட்டிற்கு சென்ற சிலம்பரசன், இன்று காலை வெளியே வரவில்லை. பின், அறையிலிருந்து வெளியே வந்த அவரது மகள் தனது தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதையும், அருகில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டதைக் கண்டு கதறி அழுதுள்ளார். Human Rights Day Awareness Programme: மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தேவகோட்டை கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் அகிலாண்டேஸ்வரி மற்றும் சிலம்பரசன் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் சிலம்பரசன் மது அருந்துவதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியை கொலை (Murder) செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தொடர்பான எண்ணத்தை தடுக்க அரசின் 044-24640050 (Suicide Helpline Number 044-24640050) என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும். புகார் அள்ளிப்பவரின் ரகசியம் காக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, எதிர்காலத்திற்கு உதவி செய்யப்படும்.