டிசம்பர் 11, சென்னை (Astrology Tips): கன்னி ராசியில் இருக்கும் அஸ்தம் (Astham) நட்சத்திரக்காரர்களே, கடந்த ஓராண்டாக, மிகவும் சிரமப்பட்டு, துன்பப்பட்டு, கஷ்டப்பட்டு, உடல் நலிவுற்று, கடன் நெருக்கடிகளால் மன உளைச்சல் ஏற்பட்டு, குடும்பத்தில் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு, இப்படி நிறைய படாதபாடு பட்டு விட்டீர்கள். மிகப்பெரிய இரண்டு மலைகளை தூக்கி உங்கள் தலையில் வைத்தால் எப்படி பாரமாக இருக்குமோ, அப்படி ஒரு பாரத்தை சுமந்து வந்த நீங்கள், சமீபத்தில் உங்கள் தலையில் இருந்து ஒரு மலை உருண்டு வேறு இடத்திற்கு சென்று விட்டது. அதனால் ஓரளவு ரிலாக்ஸ் ஆக இருப்பீர்கள். இன்னொரு மலையும் வரும் மார்ச் மாதத்திற்கு மேல் உங்கள் தலையில் இருந்து இறைவன் இறக்கி வைப்பார்.
ஜாதக ரீதியாக திசை புத்திகள் வலிமையாக இருந்திருந்தாலும் கோச்சாரம் உங்களுக்கு கடந்த பத்து மாதங்களாகவே மிகவும் ஒரு மோசமான அமைப்பில் இருக்கின்றது. ஒரு சாதாரண விஷயத்தை கூட பலமுறை அலைந்து திரிந்து கடினமாக உழைத்து தான் நீங்கள் அந்த காரியத்தை நிறைவேற்றி இருப்பீர்கள். அதிகமான பேர் வேலை வாய்ப்பு இழந்திருக்கலாம். சுயதொழில் செய்பவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டங்கள், தொழில் சரியில்லாமல் இருப்பது, போன்ற பலன்களை அனுபவித்து இருக்கலாம். ஒரு சிலர் உடல் நோய் வாய் பட்டு மருத்துவ செலவு செலவழித்து இருக்கலாம். படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் நாட்டமே சென்றிருக்காது. பள்ளி கல்லூரிகளில் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கலாம். Astrology: 2025 ஆம் ஆண்டு உத்திரம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
கடன் தொல்லை அதிகரித்து இருந்திருக்கும். நாம் ஏன் உயிர் வாழ்கிறோம். இதற்கு ஒரு விடிவு காலமே பிறக்காதா? என்ற சிந்தனைகள் எல்லாம் உங்களுக்கு ஓடி இருந்திருக்கும். இப்பொழுது கொஞ்சம் ஒரு மாற்றத்தை உணர்வீர்கள் வரும் மார்ச் மாதத்திற்கு மேல் உங்கள் கவலைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல நீங்கிவிடும். எதற்கும் கவலைப்பட வேண்டாம். வேலையில்லாதவர்களுக்கு பங்குனி மாதம் முதல் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. திருமண வயதினருக்கு திருமணம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. கடன் தொல்லைகள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். ஷேர் மார்க்கெட்டில் ஓரளவு லாபம் உண்டு. மனைவியால் கூட்டாளிகளால் நண்பர்களால் ஆதாயம் உண்டு. புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள்.
மார்ச் மாதத்திற்கு மேல் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. இதுவரை அசதியாக சோர்வாக டல்லாக இருந்த நீங்கள் இப்போது புத்துணர்ச்சியோடும் புது பொலிவோடும் தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும், நீட்டாக டிரஸ் செய்து கொள்வதிலும் அக்கறை செலுத்துவீர்கள். வீண் அலைச்சல் குறையும், எதையும் திட்டமிட்டு செயல்படுங்கள். வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம். கொள்கை வெல்வதே கொண்ட லட்சியமாக நீங்கள் உழைப்பதற்கு ஏற்ற பலன் மார்ச் மாதத்திற்கு மேல் முழுமையாக கிடைக்கும். கலை துறையினருக்கு புதிய வாய்ப்புகள் பிரம்மாண்டமான வெற்றி ஏராளமாக பணம் சம்பாதிக்க யோகம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு மார்ச் மாதத்திற்கு மேல் புதிய பதவி, புதிய வாய்ப்புகள், மூத்த அரசியல்வாதிகளால் ஆதாயம் காரிய சாதனை போன்ற நல்ல பலன்கள் கிடைக்கும். அரசு அதிகாரிகளுக்கு மார்ச் மாதத்திற்கு மேல் பதவி உயர்வு, நல்ல பெயர் எடுப்பது, பாராட்டு பெறுவது போன்ற நல்ல பலன்கள் நடைபெறும். பெண்கள் புதிய நகைகள் புதிய ஆடைகள் வாங்குவது போன்ற சுப பலன்கள் நடைபெறும்.
பரிகாரம்: துர்க்கை வழிபாடு துன்பத்தைத் தூக்கும். நவக்கிரக சனீஸ்வர வழிபாடு நன்மையை தரும். சாதுக்கள் தரிசனம், புண்ணிய ஸ்தல யாத்திரை, தந்தை வழி ஆதரவு போன்ற பலன்கள் நிச்சயமாக நடைபெறும்.
மார்ச் வரை உங்கள் மதிப்பெண் 50 மார்ச்சுக்கு மேல் உங்கள் மதிப்பெண் 80.
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.