டிசம்பர் 11, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது, வீட்டிற்குள் இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சத்யா, சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Ajith Kumar On Kadavuley Slogan: "வாழு, வாழ விடு" கடவுளே அஜித்தே என யாரும் இனி சொல்லாதீங்க.. ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்த அஜித்.!
இந்நிலையில் இந்த வாரம் மிட்வீக் எவிக்ஷன் நடக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் ஓட்டின் நிலவரப்படி ஜாக்கலின், சவுந்தர்யா, பவித்ரா, அருண், அன்ஷிதா ஓரளவு வாக்குகளை வாங்கி இருக்கிறார்கள். சத்யா, தர்ஷிகா ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் தான் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் முதலில் சத்யா வெளியேறுவார் என்றும், வார இறுதியில் தர்ஷிகா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ: