டிசம்பர் 11, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், கோலார் (Kolar) மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 54 மாணவிகள் பள்ளிச் சுற்றுலா சென்றுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அவர்கள், முருடேஸ்வரர் கோவில் கடற்கரைக்கு சென்றனர். அவர்களில் 7 மாணவிகள் ஒன்றாக கடற்கரையில் குளித்தனர். அப்போது, ஆழமான கடல் பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்களின் சத்தம் கேட்டு சக மாணவிகள், ஆசிரியர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளில் 3 பேரை காப்பாற்றினர். அதில் 4 பேர் கடலில் மூழ்கினர். கடலில் மூழ்கி (Drowning) மாணவிகள் ஸ்ரீவந்ததி, தீஷிதா, லாவண்யா, வந்தனா என அடையாளம் காணப்பட்டனர். Fake Milk Factory: மக்களே உஷார்! பாலில் செய்யப்படும் கலப்படம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ வைரல்..!
இதனையடுத்து காப்பாற்றப்பட்ட யசோதா, வீக்ஷனா, லிபிகா ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவைலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள்ளிட்டோர் மருத்துவனைக்கு சென்று நிலைமையை கண்டறிந்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.