டிசம்பர் 11, அவிநாசி (Tiruppur News): திருப்பூர் மாவட்டம், அவிநாசியை (Avinashi) சேர்ந்த மாணவிகள் அவந்திகா (வயது 19), மோனிகா (வயது 19). இவர்கள் இருவரும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தனர். மேலும், இருவரும் பகுதிநேரமாக பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், அவந்திகா வீட்டுக்கு மோனிகா நேற்று (டிசம்பர் 10) மாலை சென்றுள்ளார். Girl Dies In Classroom: வகுப்பறையில் உக்காந்திருந்த சிறுமி துடிதுடித்து பலி; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!
இந்நிலையில், மோனிகா அறைக்குள் சென்றபிறகு நீண்ட நேரமாகியும் அவந்திகா அறைக்கதவு திறக்காததால், சந்தேகமடைந்து அருகில் இருந்தவர் பார்த்த போது, இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவிநாசி காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுதொடர்பாக அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில், அவந்திகா மற்றும் மோனிகா இருவரும் நல்ல நட்பாக பழகி வந்துள்ளனர். எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வருவது, படிக்கும்போது ஒன்றாக சேர்ந்த படிப்பது இவ்வாறு இருந்துள்ளனர். ஆனால், அவர்களது பெற்றோர் ஒன்றாக இருந்து படித்தால் சரியாக படிக்கமாட்டீர்கள், தனித்தனியாக படியுங்கள் என்று தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் தங்கள் நட்பை பிரித்துவிடுவார்கள் என பயந்து இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தொடர்பான எண்ணத்தை தடுக்க அரசின் 044-24640050 (Suicide Helpline Number 044-24640050) என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும். புகார் அள்ளிப்பவரின் ரகசியம் காக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, எதிர்காலத்திற்கு உதவி செய்யப்படும்.