Avoid Mosquitos: கொசுக்களின் தொல்லை உங்களின் வீட்டில் அதிகரித்துவிட்டதா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
இதன் வீரியத்தால் கொசுக்கள் சாகின்றன. மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
டிசம்பர், 10: மழைக்காலம் (Rain Season) தொடங்கிவிட்டால் வீட்டிற்குள் சொந்தங்கள், நண்பர்களின் படையெடுப்பை விட கொசுக்களின் (Mosquitos) வருகை கேட்காமலேயே அதிகளவு இருக்கும். இவற்றை விரட்ட பலரும் வீடுகளில் கொசுவர்த்தி சுருள், ஸ்ப்ரே, பிற திரவங்கள் போன்றவற்றை உபயோகம் செய்து வருகிறோம். இவை ரசாயனம் நிறைந்தவை ஆகும். இதன் வீரியத்தால் கொசுக்கள் சாகின்றன.
அதே சமயத்தில், இவ்வாறான இரசாயனம் நிறைந்த கொசுவர்த்திகளால் ஆரோக்கியத்தில் குறைபாடும் ஏற்படும். மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்கள் கொசுக்களால் பரவுகிறது என்றால், ரசாயனங்கள் நமது உடலுக்கு பெரியோர் - சிறியோர் பாகுபாடு இன்றி பிற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
அரசின் அனுமதிப்படி கொசுவர்த்திகளில் குறிப்பிட்ட அளவே ரசாயனம் இருக்கும் என்றாலும், ஒருசிலர் விடிய விடிய கொசுவர்த்திகளை (Mosquitos Coil) ஏற்றிவைத்து அடைத்த வீட்டினுள் உறங்குவார்கள். இது மிகவும் ஆபத்தானது ஆகும். இன்று எளிய முறையில் கொசுக்கடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள் தொடர்பான விபரங்களை நாம் தெரிந்துகொள்வோம். Countries Affect Climate Change: காலநிலை மாற்றத்தினால் உலகளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள் இதுதான்.. அதிர்ச்சியை தரும் பட்டியல்.!
மாலை நேரத்தில் 5-6 மணிக்குள் வீட்டின் ஜன்னல், கதவுகளை மூடுவது கொசுக்களின் வரவை குறைக்கும். அதேபோல, கொசுவலைகளை ஜன்னல்களில் பொருத்தலாம். பகல் நேரங்களில் சூரியவெளிச்சம் கொசுக்களை அழித்துவிடும். இரவுகளில் அவை எளிதில் வீடுகளை நோக்கி படையெடுக்கும். உங்களின் வீட்டிற்கு அருகே அல்லது வீடுகளை சுற்றிலும் செடிகள் இருந்தால் ஆற்றை சுத்தம் செய்யுங்கள்.
துளசி, சாமந்தி, புதினா, லெமன் கிராஸ், லவ்வண்டர் போன்ற செடிகளின் வாசம் கொசுக்களுக்கு பிடிக்காது என்பதால், அவை இயற்கையாக கொசுவிரட்டியாக செயல்படுகிறது. அதனை வீட்டினை சுற்றிலும் வளர்க்கலாம். இவை கொசுக்களை மட்டுமல்லாது சில வகை பூச்சிகளையும் விரட்டும் தன்மை கொண்டது.
ரசாயன கொசு விரட்டியை தவிர்ப்பவர்கள் பூண்டு சாறை உபயோகம் செய்யலாம். பூண்டை தோலுரித்து நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வீடு முழுவதும் தெளித்தால் பூண்டின் வாசத்திற்கு கொசுக்கள் வராது. கொசுக்களின் உற்பத்தி இருந்தாலும் அதனை கட்டுப்படுத்தும். வீட்டின் மேற்கூரை, குளிர்சாதன பெட்டியில் நீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தி இருக்கிறதா? என சோதித்து அதையும் சுத்தம் செய்யுங்கள்.
எலுமிச்சை பழத்தை நறுக்கி, அதன் நடுவே கிராம்பை வைத்தால் கொசுக்கள் வீட்டில் இருந்து ஓட்டம் பிடிக்கும். மேலும், அகண்ட பாத்திரத்தில் நமது வீட்டில் உள்ள சோப்புகளை சேர்த்து நீர் ஊற்றி வைத்தால், சோப்பு நீர் கொசுக்களை ஈர்த்துக்கொள்ளும். இதனால் கொசுக்கள் சோப்பு நீரை மீது அமர்ந்து அப்படியே சிக்கி செத்துவிடும்.