Husband Kills Wife: குடும்ப தகராறில் விபரீதம்.. 8 மாத கர்ப்பிணி பெண் கத்தியால் குத்திக் கொலை..!

ஆந்திர பிரதேசத்தில் குடும்ப தகராறில் கணவர் தனது 8 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband Stabs Pregnant Wife in AP (Photo Credit: @ndtv X)

ஏப்ரல் 15, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தைச் (Visakhapatnam) சேர்ந்தவர் அனுஷா (வயது 27). இவர், ஞானேஷ்வர் என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதி பி.எம். பாலேம் பகுதியில் உள்ள உடா காலனியில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அனுஷா எட்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். Nursing Course Scam: நர்சிங் பயிற்சி அளிப்பதாக மோசடி.. வெளியான பரபரப்பு தகவல்..!

கர்ப்பிணி பெண் கத்தியால் குத்திக் கொலை:

இந்நிலையில், அனுஷா மற்றும் ஞானேஷ்வர் இடையே நேற்று (ஏப்ரல் 14) காலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஞானேஷ்வர், வீட்டில் இருந்த கத்தியை (Husband Stabs Pregnant Wife) எடுத்து தனது காதல் மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், 8 மாத கர்ப்பிணியான அனுஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து மயங்கினார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக தெரிவித்தனர்.

கணவர் கைது:

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவாக இருந்த ஞானேஷ்வரை நேற்று மாலை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement