ஏப்ரல் 14, தானே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், தானேவில் (Thane) கடந்த 2021ஆம் ஆண்டு தானே ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் திறன் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அரசாங்க சான்றிதழுடன் 3 ஆண்டு நர்சிங் பயிற்சி திட்டத்தை விளம்பரப்படுத்தியது. நிறுவனம், ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் லட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கட்டணத்தை வசூலித்து, சேர்க்கையின் போது, மாணவர்களின் அசல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் பள்ளி இறுதிச் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டது. Woman Gang Raped: தனியாக வரும் பெண்கள் டார்கெட்.. வருங்கால கணவரின் கண்முன் நெஞ்சை நடுங்கவைக்கும் கொடுமை..!
நர்சிங் படிப்பு மோசடி:
இந்நிலையில், அதில் சேர்ந்த மாணவர்கள் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் நர்சிங் தேர்வுகளை எழுதினர். மேலும், இதன் முடிவுகள் 2024 டிசம்பரில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், முடிவுகள் எதுவும் வழங்கப்படாததால்,மகாராஷ்டிரா நர்சிங் கவுன்சில் பதிவுக்கு கூடுதலாக ரூ.20,000 கோரிய நிறுவன அதிகாரிகளிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். சில மாணவர்கள் தொகையை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர். மேலும், மாணவர்கள் நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் செல்ல முயன்றபோது, நிறுவனம் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். இரு உரிமையாளர்களையும் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை.
23 மாணவர்கள் புகார்:
இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவர்கள் நௌபாடா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுவரை, 23 மாணவர்கள் புகார்களைப் பதிவு செய்துள்ளனர். இதன் முதற்கட்ட விசாரணையில், ரூ.33.17 லட்சம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மோசடி செய்த நிறுவனம் மற்றும் அதன் தலைமறைவாகியுள்ள ஊழியர்கள் குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.