ASI Killed: மணல் கொள்ளையை தடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் டிராக்டர் ஏற்றிப்படுகொலை; நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!

இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் செயலை கண்டிக்க சென்ற காவலர் ஒருவர், டிராக்டர் ஏற்றி சட்டவிரோத கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ள பெருந்துயரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

MP Cop Mahendra (Photo Credit: @MP_Tak X)

மே 05, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே சட்டவிரோதமாக மணலை கடத்தும் கும்பலின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக (ASI Killed by Sand Mafia Gang) கூறப்படுகிறது. இவ்வாறான சட்டவிரோத செயலை மேற்கொள்ளும் கும்பல், அதனை எதிர்த்து போராடும் அரசுத்துறை அதிகாரிகளை நேரடியாக கொலை செய்து, யாரும் தங்களை எதிர்க்காத வண்ணம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி சர்ச்சை செயலை தொடருகிறது. அந்த வகையில், அம்மாநிலத்தில் உள்ள ஷாடோல் மாவட்டம், பியோஹாரி காவல் நிலையத்தில், ஏஎஸ்ஐ பொறுப்பில் இருப்பவர் மகேந்திர பாக்ரி. இவருக்கு நேற்று ஜப் நல்லாவி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், மகேந்திரா மற்றும் இரண்டு காவலர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். அங்கு மணல் கொள்ளையை நேரில் பார்த்த கூடுதல் காவல் உதவி ஆய்வாளர், தனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்றுள்ளார். Liquid Nitrogen Foods: வயிற்றில் விழுந்த துளை; இவ்வுளவு பேராபத்து மிக்கதா திரவ நைட்ரஜன்?.. அதிர்ச்சியூட்டும் தகவல் இதோ.! 

தொடரும் மணல் கொள்ளை மரணங்கள்: சர்ச்சை செயலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த டிராக்டர் ஓட்டுநர் மதுரம் பணியாளர்களை அவர் எச்சரித்தார். அச்சமயம் சற்றும் எதிர்பாராத வகையில் வாகனத்தை இயக்கிய கும்பல், மகேந்திராவின் மீது வாகனத்தை செலுத்தி அங்கிருந்து தப்பித்து சென்றது. இந்த கொடூர சம்பவத்தில் ஏஎஸ்ஐ மகேந்திர பாக்ரி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறை உயர் அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் ஓட்டுனரும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அம்மாநிலத்தில் இவ்வாறான கொடூரங்கள் புதிதில்லை என முன்பு நடந்த சம்பவங்கள் உறுதி செய்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருவாய் ஆய்வாளர் (Patwari) பிரசன்னா சிங் என்பவர் மணல் மாபியா கும்பலால் கைது செய்யப்பட்டார். இவர் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று பின் பாடவாரியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.