நவம்பர் 23, பெர்த் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 16-வது பார்டர் கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy 2024) தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு (AUS Vs IND 1st Test, Day 2) சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், நேற்று (நவம்பர் 22) முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியது. இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. IND Vs AUS 1st Test: 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை; ஆஸ்திரேலியா 104 ரன்னில் ஆல் அவுட்.. இந்தியா அசத்தல் பந்துவீச்சு..!
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) 41 ரன்களும், ரிஷப் பண்ட் ((Rishabh Pant) 37 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில், ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood) 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 51.2 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா (Jasprit Bumrah) 5, ஹர்ஷித் ராணா 3, சிராஜ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்திய அணி 46 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணி நிதானமாக விளையாடினர். இருவரும் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அரைசதம் கடந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 57 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 172 ரன்கள் அடித்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 90 ரன்னிலும், கேஎல் ராகுல் (KL Rahul) 62 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் இந்தியா 218 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
ஜெய்ஸ்வால் அபாரம்:
A flick for six in a Test match against Mitch Starc! 😳
Not sure about the speed gun, but it’s definitely coming too slow for #YashasviJaiswal! 😅
📺 #AUSvINDOnStar 👉 1st Test, Day 2, LIVE NOW! #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/OTGcstyjYe
— Star Sports (@StarSportsIndia) November 23, 2024