நவம்பர் 23, சென்னை (Viral News): இன்றளவில் ஒவ்வொரு வீட்டிலும் குளிர்சாதன பெட்டி என்பது இருக்கிறது. உணவுப்பொருட்கள், ஐஸ்கிரீம், ஜூஸ் போன்றவற்றை பதப்படுத்தி வைத்து மக்கள் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டி, இன்றியமையாத பொருட்களாக மாறி இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் முதல் செல்வந்தர்கள் வரை காலத்தின் ஓட்டத்திற்கேற்ப மாறி இருக்கின்றனர்.
பிரிட்ஜை சுத்தம் செய்த பெண்:
பிரிட்ஜை (Re-Fridge Safety) நாம் வீட்டில் வைத்து பயன்படுத்தும் போது, அதன்பின்பக்க கம்பிகள் சுவற்றில் இருந்து குறைந்தது அறை அடி நீளம் கொண்டு இருக்க வேண்டும். அவ்வப்போது அதனை சுத்தம் செய்ய வேண்டும் என பல வழிமுறைகள் இருக்கின்றன. இதனிடையே, பிரிட்ஜை சுத்தம் செய்த பெண்மணி, அதனை ஸ்விட்ச்சில் பொருத்தியபடி, ஆப் செய்யாமல் சுத்தம் செய்தார். TN Govt Announcement: டெல்டா விவசாயிகளே இன்னும் 7 நாட்கள் தான்.. உடனே செய்யுங்க - அமைச்சர் அறிவிப்பு.!
மின்சாரம் கடத்தப்படும் வாய்ப்பு அதிகம்:
இதனால் பெண்ணை மின்சாரம் தாக்கிய நிலையில், நல்வாய்ப்பாக அவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். குளிர்சாதன பெட்டியில், பெட்டிக்குள் மின்சார வயர் கசிவு இருந்தாலும், குளிர்சாதன பெட்டியின் ஈரப்பதம் காரணமாக மின்சாரத்தை கடத்தலாம். அல்லது மின்கம்பி பிரிட்ஜின் பக்கவாட்டு பகுதிகளில் பட்டு மின்சாரம் பாயும் வாய்ப்புகளும் அதிகம்.
ஸ்விட்சை ஆப் செய்து எலக்ட்ரானிக் பொருட்களை சுத்தம் செய்யுங்கள்:
ஆகையால், பரம்பரிப்பு பணிகளை மேற்கொண்டால் ஸ்விட்சை ஆப் செய்து, அதனை பிளக் பாயிண்டில் இருந்து வெளியே எடுத்துவிட்டு பின் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது நல்லது. இந்த விஷயம் பிரிட்ஜுக்கு மட்டுமல்லாது, மின்சாதனம் சார்ந்த பொருட்களை சுத்தம் செய்யும்போது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவருகிறது.
விழிப்புணர்வு வீடியோ உங்களின் பார்வைக்கு:
ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும்போது ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு செய்யவும் pic.twitter.com/2EMEyDIMFh
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 () November 22, 2024