Tomorrow weather (Photo Credit: LatestLY)

நவம்பர் 23, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ மழை பெய்துள்ளது. புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதியில்‌ வறண்ட வானிலை நிலவியது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில்.,

தெற்கு அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்‌ஸ் காரணமாக, இன்று (23-11-2024) காலை 08:30 மணி அளவில்‌ பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல்‌ பகுதி மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில்‌ நகர்ந்து, வருகின்ற 25 ஆம்‌ தேதி வாக்கில்‌, தெற்கு வங்கக்கடலின்‌ மத்‌திய பகுதியில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்‌. இது மேலும்‌ அதற்கடுத்த இரு தினங்களில்‌ வடமேற்கு திசையில்‌ தமிழகம்‌- இலங்கை கடற்கரையை நோக்க நகரக்கூடும்‌. பூமத்திய ரேகையை ஓட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல்‌ பகுதி மற்றும்‌ தென்‌கிழக்கு வங்கக்கடல்‌ பகுதி முதல்‌ குமரிக்கடல்‌ பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி நிலவுகிறது.

இன்றைய வானிலை (Today Weather):

23-11-2024 இன்று தமிழகத்துல்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. TN Govt Announcement: டெல்டா விவசாயிகளே இன்னும் 7 நாட்கள் தான்.. உடனே செய்யுங்க - அமைச்சர் அறிவிப்பு.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

24.11.2024: கடலோர தமிழகத்‌தில்‌ ஒருல இடங்களிலும்‌, உள்‌ தமிழகத்‌தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

நவ.25 முதல் கனமழை:

25-11-2024:கடலோர தமிழகத்‌இல்‌ அநேக இடங்களிலும்‌, உள்‌ தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, கடலூர்‌, அரியலூர்‌, சிவகங்கை புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவ.26ல் கனமழை:

26-11-2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கடலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, ராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவையில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.27 கனமழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:

27-11-2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.28 கனமழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:

28-11-2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவையில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, கள்ளக்குறிச்‌சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது. 4-Year-Old Child Girl Dies: அங்கன்வாடிக்கு சென்று வந்த சிறுமி திடீர் மரணம்.. பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்.! 

நவ.29 கனமழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:

29-11-2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, ஈரோடு, நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Today):

சென்னை மற்றும்‌ புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ அதிகாலை வேளையில்‌ லேசான பனி மூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தெற்கு அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ தென்‌கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக, இன்று (23-11-2024) காலை 08:30 மணி அளவில்‌ பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல்‌ பகுதி மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில்‌ நகர்ந்து, வருகின்ற 25 ஆம்‌ தேதி வாக்கில்‌, தெற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதியில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்‌. இது மேலும்‌ அதற்கடுத்த இரு தினங்களில்‌ வடமேற்கு திசையில்‌ தமிழகம்‌- இலங்கை கடற்கரையை நோக்க நகரக்கூடும்‌.

இதன்‌ காரணமாக, மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுஒறார்கள்‌.

23-11-2024 மற்றும்‌ 24-11-2024 அன்று தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்‌ காரணமாக, மீனவர்கள்‌ ஆழ்கடல்‌ பகுதிகளில்‌ மீன்‌ பிடிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

25-11-2024 மற்றும்‌ 26-11-2024 அன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

27-11-2024 அன்று தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

23-11-2024 அன்று தென்‌கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, தெற்கு அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய வடக்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

24-11-2024 அன்று தென்‌கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்‌, அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

25-11-2024 அன்று தெற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

26-11-2024 அன்று தென்மேற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு- மத்‌தியமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

27-11-2024 அன்று தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌கிழக்கு- மத்‌தியமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்‌ காரணமாக, மீனவர்கள்‌ ஆழ்கடல்‌ பகுதிகளில்‌ மீன்‌ பிடிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..

26-11-2024 மற்றும்‌ 27-11-2024 வரையில் தெற்கு கேரளா மற்றும்‌ அதனை ஒட்டிய லட்சத்‌தீவு - மாலத்‌தீவு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.