Momos: மோமோஸ் பிரியரா நீங்கள்?.. கொஞ்சம் மாவு பிசையும் லட்சணத்தை பாருங்களேன்.. பகீர் சம்பவம்.!

பலரின் விருப்ப சிற்றுண்டி உணவாக மாறியுள்ள மோமோஸ் மாவை இளைஞர் ஒருவர் கால்களால் ஏறி மிதித்து சாவகாசமாக பிசைந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

Momos Preparing in Jabalpur (Photo Credit: @SachinGuptaUP X)

செப்டம்பர் 07, ஜபல்பூர் (Madhya Pradesh News): தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மேலை நாடுகளின் சிற்றுண்டி மோகம் போன்றவை, இன்றளவில் பல விதமான புதிய துரித உணவகம் மற்றும் சிற்றுண்டி வகைகளை நம்மிடையே அறிமுகம் செய்துள்ளது. நாம் முன்பு சாப்பிட்ட சீவல், முறுக்கு, கடலைமிட்டாய் போன்றவை கூட, இன்றளவில் வெவ்வேறு சுவையான பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்றளவில் பலரும் விரும்பி சாப்பிடும் பொருட்களில் ஒன்றாக மோமோஸ் உருவாகியுள்ளது. Poisonous Snake: பாம்புக்கு முத்தம் கொடுத்து அட்ராசிட்டி; வாயிலேயே போட்ட பாம்பு.. சிறுவன் துடிதுடித்து மரணம்.! 

கேள்விக்குறியாகும் தரம்:

பெருநகரங்கள் முதல் சிறுநகரங்கள் வரை மோமோஸ் எனப்படும் சிற்றுண்டியை சமைத்து சாப்பிட பிரத்தியேக விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டு வியாபாரம் நடக்கிறது. துரித உணவகங்கள் வாயிலாக ஏராளமான தொழில் பெருகி, புதிய சிற்றுண்டி வகைகள் கண்டறியப்பட்டால், அவற்றின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு தரம் என்பது பெரும்பாலான இடங்களில் கேள்விக்குறியாகி வருகிறது.

கால்களில் மிதித்து மோமோஸ் தயாரிப்பு:

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர், பார்க்கி தேக்ஹீ பகுதியில் ராஜ்குமார் கோஸ்வாமி, சச்சின் கோஸ்வாமி என்பவர்கள் மோமோஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இக்கடையில், உள்ளூரை சேர்ந்த ஏராளமானோர் மோமோஸ் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்து இருக்கின்றனர். இதனிடையே, சம்பவத்தாண்டன்று ராஜ்குமார் கோஸ்வாமி, ஜட்டி-பனியன் போன்ற உள்ளாடை மட்டும் அணிந்து, கால்களால் மோமோஸ் மாவை பிசைந்த அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், அவர்களின் மோமோஸ் கடைக்கு சென்று இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மோமோசை கால்களால் மிதித்து சுவையூட்டி தயாரிக்கும் பிரத்தியேக காணொளி:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif