5-Year-Old Girl Raped: 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்; தலைநகரில் பகீர் சம்பவம்.!

வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை நோட்டமிட்டு, 14 வயது சிறுவன் 5 வயது சிறுமியை கற்பழித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Child Sexual Abuse | File Pic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 01, புதுடெல்லி (New Delhi): டெல்லியில் உள்ள தென்மேற்கு பகுதியில் 5 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் கூலித்தொழிலாளர்கள் ஆவார்கள். இதனால் தினமும் அவர்கள் வேலைக்கு சென்று வந்துதான் குடும்பத்தை நடத்தி இருக்கின்றனர். இதனால் இவர்களின் குழந்தை, அங்குள்ள அக்கம் பக்கத்தினரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. Bomb Threat to Indigo Flight: நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக தரையிறக்கம்..! 

14 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்:

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை குழந்தை வீட்டில் தனியாக இருந்தபோது, சிறுமியை நோட்டமிட்ட 14 வயது சிறுவன், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளான். சிறுமியின் வீட்டில் இருந்து சிறுவன் சந்தேகத்திற்கு இடமான வகையில் வெளியேறியதை கண்ட அக்கம்-பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியான நிலையில், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 14 வயது சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.